"க்ளீன் ஸ்வீப்!"தென் மாநிலங்களில் பெரிய சர்ப்ரைஸ்- பிரதமர் மோடி நம்பிக்கை! லிஸ்டில் தமிழகம் இருக்கா?
டெல்லி: லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்த முறை அனைவருக்கும் சப்ரைஸ் தரும் வகையில் பாஜக தென் மாநிலங்களில் பெரிய வெற்றியைப் பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

தொடர்ந்து 3ஆவது முறையாக வென்று ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. இதற்காகப் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு பாஜக தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
மோடி: இதற்கிடையே பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், 2024 லோக்சபா தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜக ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். குறிப்பாக இரண்டு மாநிலங்களில் பாஜக க்ளீன் ஸ்வீப் செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
லிஸ்டில் தமிழ்நாடு: இந்தி பேசும் மாநிலங்களில் மட்டும் பாஜக ஆதிக்கம் செலுத்துகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "இது முன்பு இருந்த நிலை.. இப்போது நிலைமை மாறிவிட்டது. கோவா, குஜராத், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா எல்லாம் என்ன இந்தி பேசும் மாநிலங்களா? ஆனால், அந்த மாநிலங்களிலும் மக்கள் பாஜகவைத் தான் தேர்வு செய்கிறார்கள்.. இன்று நாடு முழுவதும் பாஜக முன்னிலையில் உள்ளது, இந்த முறை நாடு முழுவதும் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெறும்.
400 இடங்கள்: இதை நான் சொல்லவில்லை.. இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் வெற்றியைத் தர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். பாஜக தனியாகவும் சரி, என்டிஏ கூட்டணியாகவும் சரி நாங்கள் எங்கள் முந்தைய சாதனைகளை முறியடிப்போம்" என்றார்.
தொடர்ந்து தென் மாநிலங்கள் குறித்துப் பேசிய அவர், "இந்த தேர்தல் முடிவுகளில் தென்னிந்தியா மிகப் பெரிய ஆச்சரியத்தைத் தரும். கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வரலாறு காணாத மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.. இந்தத் தேர்தல் முடிவுகள் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு பெரிய சாதனை இருக்கும்.
க்ளீன் ஸ்வீப்: குறிப்பாகத் தெலுங்கானாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிக பெரிய வெற்றி பெறும். சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கும் மாநிலம் கூட, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள்.. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் க்ளீன் ஸ்வீப்பை பதிவு செய்வோம்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், "இன்னொரு முறை மோடி அரசு என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். இந்த முறை பாஜகவின் முழக்கம் ஒன்று தான்.. அப் கி பார், 400 பார் (இந்த முறை, 400க்கு மேல்) என்பதை முன்னிறுத்திய பிரச்சாரம் செய்து வருகிறோம்" என்றார்.

லோக்சபா தேர்தல்: நமது நாட்டில் இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவில் 380 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு அடுத்து வரும் நாட்களில் தேர்தல் நடக்க உள்ளது. மே 20ஆம் தேதி 49 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கும் நிலையில், மே 25ஆம் தேதி 58 தொகுதிகளுக்கும் ஜூன் 1ஆம் தேதி 57 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications