முஸ்லீம் பெண்கள் ஆசீர்வாதம் எனக்கு உண்டு..முஸ்லீம்கள் புகழ்வதால் காங்.க்கு வயிற்றுவலி - பிரதமர் மோடி
டெல்லி : நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் நான் முஸ்லிம் சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆசீர்வாதங்களை பெற்று உள்ளேன் எனவும், முஸ்லிம் பெண்கள் தம்மை புகழ்வது காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினருக்கு வயிற்று வலியை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்திர பிரதேசத்தில் தேர்தலையொட்டி பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள சமாஜ்வாடி கட்சிக்கு பாரம்பரியமாக முஸ்லிம்கள் மத்தியில் கணிசமான ஆதரவு உள்ளது.
மாநிலத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம் மாநிலத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகளை கவர கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் பேச்சு
உ.பி. மற்றும் நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், உத்திரபிரதேசத்தில் பாஜகவே முன்னணியில் உள்ளது. ஆனால் கடந்த முறையை விட இந்த முறை குறைவான இடங்களை பெற்று ஆட்சியை பாஜக தக்க வைக்கும் என கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பஞ்சாபில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் உள்ள எதிர்கட்சிகளை தாக்கி பேசினார்.

இஸ்லாமிய பெண்களின் ஆசிர்வாதம்
இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் முத்தலாக் தடை சட்டத்தை சிலர் எதிர்ப்பதாக குற்றம் சாட்டிய அவர், தங்களுக்கு வாக்களிக்கும் மக்களின் நலனைக் கூட அவர்கள் விரும்பவில்லை என்ற பிரதமர், "இன்று, நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், நான் முஸ்லிம் சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறேன், ஏனென்றால் அவர்களைப் பாதுகாக்க நான் ஒரு பெரிய சேவையைச் செய்துள்ளேன், முத்தலாக் கொடுமையிலிருந்து முஸ்லிம் சகோதரிகளை விடுவித்தோம் என்றார்.

பெண்களின் ஆதரவு
முஸ்லிம் சகோதரிகள் பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கத் தொடங்கியபோது, இந்த வாக்கு வெறியர்கள் கலக்கமடைந்தனர் என சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸை கடுமையாக சாடிய அவர், முஸ்லிம் பெண்கள் தம்மைப் புகழ்வது அவர்களுக்கு "வயிற்று வலியை" ஏற்படுத்தியதாக கூறினார், "என் அம்மாக்களே, சகோதரிகளே, முத்தலாக்கால் உடனடி விவாகரத்து பெற்ற பிறகு, பெண்களான அவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள், அவர்கள் எங்கே போவார்கள்? அப்படிச் செய்துவிட்டு வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் பெண்ணின் பெற்றோரின், உறவினர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள் என்றார்.

அரசு நிற்கிறது
"நான் வாக்குகளைப் பற்றியோ, என் நாற்காலியைப் பற்றியோ நினைக்கவில்லை, எனது நாட்டைப் பற்றி அதன் மக்களைப் பற்றியோ நினைக்கிறேன், ஆனால் அவர்கள் அதை எதிர்த்தார்கள் எனப் பேசிய பிரதமர், முஸ்லீம் மகள்களை முன்னேற்றமடைய விடாமல் சிலர் தடுக்க முயல்கிறார்கள். எங்கள் அரசு முஸ்லிம் பெண்களுடன் நிற்கிறது" என்றும் பிரதமர் பேசினார்.












Click it and Unblock the Notifications