ஊழல் முதல் தீவிரவாதம் வரை.. 2014க்கு முன்பு இந்தியர்கள் தன்னம்பிக்கை இழந்து இருந்தனர்- பிரதமர் மோடி
டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதங்களுக்குப் பதிலளித்து பிரதமர் மோடி லோக்சபாவில் உரையாற்றினார்.. பிரதமர் மோடி பேசும் போது எதிர்க்கட்சிகள் முழக்கமிட்ட நிலையில், அதையும் தாண்டி தொடர்ந்து பேசி வருகிறார். வாக்கு வங்கி அரசியல் இத்தனை காலம் நாட்டை சீர்குலைத்ததாக தெரிவித்த அவர், பொதுமக்கள் மதச்சார்பின்மைக்கு இப்போது வாக்களித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
18ஆவது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் இப்போது நடந்து வருகிறது. கடந்த ஜூன் 27ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

லோக்சபா: அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. நேற்று லோக்சபாவில் ராகுல் காந்தியும், ராஜ்யசபாவில் கார்கேவும் இது தொடர்பாகப் பேசினர். லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் பாஜகவைக் கடுமையாக விமர்சித்தார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி பேசும் போது பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள் பலரும் அவரை குறுக்கிட்டுப் பேசினர்.
மோடி: இதற்கிடையே இன்று லோக்சபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார்.. இருப்பினும், பிரதமர் மோடி பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சிகளின் முழக்கமிடத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசுமாறு முழக்கமிட்டனர். இதனால் பிரதமர் மோடி சில நிமிடங்கள் தனது பேச்சை நிறுத்திய நிலையில், பின்னர் எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே தொடர்ந்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இத்தனை காலம் வாக்கு வங்கி அரசியல் செய்தார்கள். அந்த வாக்கு வங்கி அரசியல் தேசத்தைச் சீர்குலைத்துவிட்டது. ஆனால், அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்கள் தாரக மந்திரம்.. மக்களின் சிறப்பான தேர்வால் நாங்கள் 3ஆவது முறையாகச் சேவை செய்ய உங்கள் முன் நிற்கிறோம். மதச்சார்பின்மைக்கே மக்கள் வாக்களித்துள்ளனர்.
சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது ஊழலுக்கு எதிரான எந்தவொரு பாரபட்சம் இல்லாத நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த கொள்கையால் தான் மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.. வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான நோக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளோம்.
2014க்கு முன்பு நாட்டில் ஊழலே அதிகமாக இருந்தது. அப்போது இந்தியர்கள் தன்னம்பிக்கை இழந்துவிட்டனர்.. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ஊழலை மறைக்க மற்றொரு ஊழல் நடந்தது. ஆனால், அதன் பிறகு இந்தியாவின் ஊழல் அரசுகள் ஒழிக்கப்பட்டன. செயல்படுத்த முடியாத அனைத்தையும் நாங்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளோம். அதேபோல 2014க்கு முன்பு நமது நாட்டில் தீவிரவாத செயல்கள் அதிகமாக இருந்தது." என்று அவர் பேசினார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications