முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்! பிரதமர் மோடி போற்றிப் புகழாரம்!
டெல்லி: முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் எனக் கூறி அவரை போற்றிப் புகழ்ந்துள்ளார் பிரதமர் மோடி.
நம் தேசத்திற்காக முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

தேவரை வணங்குகிறேன்
''பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.'' இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிவில் கூறியிருக்கிறார்.

நேரில் வரும் திட்டம்
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு பிரதமர் மோடி நேரில் வந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி மரியாதை செலுத்துவார் எனக் கூறப்பட்ட நிலையில் இறுதியில் அந்த பயணத் திட்டம் ரத்தானது. தாம் நேரில் வரவில்லை என்றாலும் கூட முத்துராமலிங்கத் தேவரை நினைவுகூர்ந்து அவரது குருபூஜை நாளில் புகழாரம் சூட்டி பதிவு வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி.

முக்கியாமனது
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் முக்கியாமனது, முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்பது தான். அப்படியென்றால் தேசியத்தையும் தெய்வீகத்தையும் தான் அவர் இப்படி குறிப்பிடுகிறார் என்பது போல் இங்கு பொருள் படுகிறது. அதேபோல் முத்துராமலிங்கத் தேவரை பெரு மதிப்பிற்குரியவர் என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ள நிலையில், ஆளுநர் ரவி ராஜ்பவனில் வைத்து தேவர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி கவனம் ஈர்த்துள்ளார்.

கடந்தாண்டு பதிவு
கடந்தாண்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளன்று அவர் குறித்து பதிவு வெளியிட்டிருந்த பிரதமர் மோடி, மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர் என்றும் மேலும் துணிச்சலும், கனிவும் கொண்ட உள்ளத்துக்குச் சொந்தக்காரர் எனவும் புகழாரம் சூட்டியிருந்தார்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications