"நேரு இந்தியர்களை சோம்பேறிகள் என்றார்!" அப்படியே இந்திரா காந்தி பக்கம் திரும்பி.. பிரதமர் மோடி தாக்கு
டெல்லி: இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் சோம்பேறிகள், புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் என்றே ஜவஹர்லால் நேரு கருதியதாக விமர்சித்துள்ளார்.
நாட்டில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கு முன்பு நடக்கும் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப். 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதன் பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றினர்.
பிரதமர் மோடி: விவாதம் அனைத்தும் முடிந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி பதிலளித்து பேசியானர். இந்த உரையில் முதலில் எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய பிரதமர் மோடி, அதன் பிறகு பாஜக அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். மேலும், அடுத்த முறை பாஜகவே ஆட்சிக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது உரையில் வழக்கம் போல முன்னாள் காங்கிரஸ் பிரதமர்களான நேரு மற்றும் இந்திரா காந்தியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, இந்தியர்கள் சிரமங்களை எதிர்கொள்ளாமல் அதில் இருந்து தப்பி ஓடுவதாக என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூறியதாகச் சொல்லி அதைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
நேரு என்ன சொன்னார்: மேலும், அவர், "செங்கோட்டையில் இருந்து பிரதமர் நேரு பேசியதை நான் இங்குப் படிக்கிறேன். பொதுவாக இந்தியர்களுக்குக் கடினமாக உழைக்கும் பழக்கம் இல்லை, ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் போல இங்குள்ளவர்கள் உழைக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்திரா காந்தி: அதாவது இந்தியர்கள் சோம்பேறிகள் மற்றும் புத்திசாலித்தனம் குறைவாக உள்ளவர்கள் என்று நேரு நினைத்தார் என்பதே இதற்கு அர்த்தம்.. இந்திரா காந்தியின் சிந்தனையும் கூட நேருவிலிருந்து வேறுபட்டதல்ல.. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பேசியதையும் நான் இங்கு வாசித்துக் காட்டுகிறேன்.
சில சுப காரியங்களின் போது, நாம் மனநிறைவு அடைகிறோம்.. ஆனால், எந்த சிரமம் வந்தாலும், நம்பிக்கையற்றவர்களாக மாறுகிறோம்.. சில சமயங்களில் ஒட்டுமொத்த தேசமும் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. தோல்வி உணர்வை ஏற்றுக்கொண்டது போல் தெரிகிறது என்று கூறியவர் தானே இந்தியா காந்தி.. அவரது பேச்சை இன்று நாம் பார்க்கும் போது இந்திரா ஜி நாட்டு மக்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளதாகத் தோன்றுகிறது, ஆனால் அவர் கூறியது காங்கிரசுக்குப் பொருத்தமாக இருக்கிறது.
காங்கிரஸ்: இந்தியர்களைப் பற்றிய காங்கிரஸின் அரச குடும்பத்தின் சிந்தனை இதுவாகவே இருந்துள்ளது. ஆனால், இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் எனக்கு அபார நம்பிக்கை உள்ளது. மேலும், எதிர்க்கட்சி நிலைக்கும் காங்கிரஸ் தான் காரணம்.. காங்கிரஸ் தோல்வியடைந்தது மட்டுமின்றி, அவர்கள் மற்ற கட்சிகளையும் செயல்பட விடவில்லை. அவர்கள் பாராளுமன்றத்தையும் எதிர்க்கட்சியையும் நாட்டையும் சீரழித்துள்ளனர். நாட்டிற்கு வலுவான எதிர்க்கட்சி தேவை என்று நான் நம்புகிறேன். ஆனால், அங்கும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications