புது கொரோனா வேரியண்ட்கள் சவாலாக இருக்கும்.. பிரதமர் மோடி எச்சரிக்கை
டெல்லி: கொரோனா வைரஸ் இன்னும் முடியவில்லை. ஓமிக்ரான் மற்றும் துணை வேரியண்ட்களை கையாள்வது என்பது மேற்கத்திய நாடுகளில் சவாலானதாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைந்திருந்தது. இதனால் கொரோனா நம்மை விட்டு போய்விட்டது என ஆசுவாசமடைந்தோம். கொரோனா கட்டுப்பாடுகளும் பல மாநிலங்களில் விலக்கிக் கொள்ளப்பட்டன.

கொரோனா எண்ணிக்கை
ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அது போல் கர்நாடகா, தமிழகத்திலும் அதிகரித்து வருவதால் முகக் கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முன் தினம் முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது முகக் கவசம் கட்டாயம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு எவ்வளவு
இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சரம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி ஒரு நாளில் 2 ஆயிரத்து 483 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதுவரை கொரோனா பாதிப்பானது 4.30 கோடியாக அதிகரித்துள்ளது. புதிதாக 1,347 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

இன்று பிரதமர் ஆலோசனை
நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில் 96 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை எடுத்துக் கொண்டனர். இது பெருமை அளிக்கிறது.

15 வயதுக்கு மேற்பட்டவர்கள்
அதுபோல் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் தகுதியுடையவர்களில் 85 சதவதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பை நாம் திறம்பட கையாண்டு வரும் போதிலும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு இன்னும் முடியவில்லை. ஓமிக்ரான் தனது துணை வேரியண்டுகள் சவாலாக இருக்கும் என்பதால் அவற்றிற்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

6 வயது முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு...
எனவே நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாதிப்பு அதிகரிக்கும் போதே கொரோனாவை நாம் இன்னும் முறியடிக்கவில்லை என்பது தெளிவாகத தெரிகிறது. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியம். நாடு முழுவதும் 6-12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இந்த பணியை நாளை தொடங்கி வைக்கிறேன். கோடைக் காலம் என்பதால் மருத்துவமனையில் தீவிபத்துகள் ஏற்படாத வண்ணம் தீத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications