PM MODI: இந்தியா வளர்ச்சியை பாராட்ட மனமன்றி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி அட்டாக்
டெல்லி: நாட்டின் வளர்ச்சியை பாராட்ட மனமில்லாமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதாக ராஜ்யசபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் கடனில் மூழ்கியிருந்ததாகவும் தற்போது வராக்கடன் குறைந்து இருப்பதாகவும் மோடி பேசியுள்ளார்.
ராஜ்யசபாவில் பிரதமர் மோடி இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலுரை ஆற்றினார். லோக்சபாவில் மோடியின் பதிலுரை இன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதிலளிக்க பயந்து மோடி அவைக்கு வரவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த பரபரப்புக்கு நடுவே பிரதமர் மோடி ராஜ்யசபாவில் உரையாற்றினார். பிரதமர் மோடி உரையாற்ற தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகள் அமளிக்கு நடுவே மோடி பேசத் தொடங்கினார். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், பிரதமர் மோடி தனது உரையை தொடர்ந்தார். மோடி பேசியதாவது:-
நமது இளைஞர்களின் உரிமைகளை ஊடுருவல்காரர்கள் பறிக்கிறார்கள். பழங்குடியினரின் நிலங்களை ஊடுருவல்காரர்கள் பறிக்கிறார்கள். ஊடுருவல்காரர்களை எதிர்க்கட்சிகள் பாதுகாக்கின்றன. இந்தியா செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களால் இளைஞர்கள் பயன் அடைவார்கள்.
இந்தியா வளர்ச்சியை பாராட்ட மனமன்றி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தும் எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் தவறுகளை சரி செய்வதிலேயே நேரம் ஓடிவிடுகிறது.
எனது ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் கடனில் மூழ்கியிருந்தன. தற்போது வங்கிகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன" இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications