ஐடியா கொடுத்த மோடி.. அமெரிக்கா தாக்குதலுக்கு நடுவே ஈரான் அதிபருடன் பேச்சு.. ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வருகிறது. இன்று திடீரென்று அமெரிக்கா, ஈரானின் 3 யுரேனியம் செறிவூட்டும் மையங்களை குறிவைத்து தாக்கியது. இதனால் போர் வேகமெடுத்துள்ளது. மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய அட்வைஸை வழங்கி உள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இதுவரை மிரட்டி வந்த அமெரிக்கா இன்று நேரடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக இன்று ஈரானில் உள்ள நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்பஹான் உள்ளிட்ட 3 யுரேனியம் செறிவூட்டும் மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.

pm-modi-speaks-to-iran-president-and-request-to-dialogue-and-diplomacy-after-us-strikes-nuclear-site

ஈரான் அணுஆயுதம் தயாரிக்க இந்த 3 யுரேனியம் செறிவூட்டும் மையங்களும் மிகவும் முக்கியமானவை. இதனால் அதனை குறிவைத்து அமெரிக்கா தாக்கி உள்ளது. ஏற்னகவே இஸ்ரேல் - ஈரான் மோதல் வலுத்துள்ள நிலையில் அமெரிக்காவும் இந்த போரில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

அமெரிக்காவுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதனால் விரைவில் ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கடற்படை, ராணுவ தளம் மற்றும் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தலாம். அதேபோல் ஈரான் ஆதரவு பெற்ற பிற அமைப்பினரும் அமெரிக்காவுக்கு எதிராக களமிறங்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தான் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் இன்று பேசினார். ஈரானை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் பிரதமர் மோடி, அந்தநாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மோதலை பேச்சுவார்த்தை மூலம் உடனடியாக தீர்க்க வேண்டும். இதற்கான ராஜதந்திர நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "ஈரான் அதிபர்மசூத் பெஷேஷ்கியனுடன் இன்று பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய பதற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தோம். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்காகவும், பதற்றத்தைக் குறைக்கவும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் நடவடிக்கையை உடனடிாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+