Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்கு ஆசியாவில் தீவிரமாகி வரும் போர் சூழ்நிலைக்கிடையே, அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் (Masoud Pezeshkian) உடன் தொலைபேசி மூலம் முக்கிய ஆலோசனை நடத்தி, பிராந்தியத்தில் அமைதி நிலை திரும்ப வேண்டியது அவசியம் என்றும், தடையற்ற கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு ஆசியாவில் தற்போது நிலவி வரும் போர் சூழல் உலக நாடுகளிளிடம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28 முதல் கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

PM Modi Speaks To Iran President

இந்த போரின் போது ஈரானின் ராணுவ தளங்கள், அணுசக்தி மையங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள் மற்றும் எண்ணெய் வளங்கள் உள்ளிட்ட 8,000-க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதல்களின் விளைவாக ஈரானில் 1,444 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 18,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக ஈரான், மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் இஸ்ரேல் நாட்டிலும் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மேலும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளும் இந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சவூதி, ஓமன், கத்தார், குவைத்போன்ற நாடுகளும் தாக்குதல்களின் விளைவாக சிக்கல்களை சந்தித்து வருகின்றன. போரின் நேரடி தாக்கமாக ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஜலசந்தி வழியாக ஆசிய நாடுகளுக்கான பெரும்பாலான கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.

அந்த போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதனால் உலகளாவிய எரிசக்தி சந்தைகளிலும் அதிர்வு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த போர் சூழலில் ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் நேரடியாக போரில் ஈடுபடவில்லை என்றாலும், அமெரிக்காவுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருவதாக சர்வதேச வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், உலக நாடுகள் அமைதி முயற்சிகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகிறது. பல உலகத் தலைவர்கள் இந்தியாவின் நடுநிலையான நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, சமரச பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி பல உலகத் தலைவர்களுடன் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக முகமது பின் ஜாயத் அல் நயான், ஷேக் சபா அல் காலித் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தியிருந்தார். மேலும் ஹைதம் பின் தாரிக் (Emanuel Macron), ஹைதம் பின் தாரிக் (Haitham bin Tariq), இரண்டாம் அப்துல்லா (Abdullah II) மற்றும் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) ஆகிய தலைவர்களுடனும் தொலைபேசி மூலம் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதேபோல் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் பெல்ஜியம் சென்று ஐரோப்பிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதுடன், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் அமைச்சர்களுடனும் தொடர்பு கொண்டு நிலைமைகளை குறித்து ஆய்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பின்னணியில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குறித்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி,"ரமலான் மற்றும் ஈரான் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்த பண்டிகை காலத்தில் மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலைநிறுத்தப்பட வேண்டும். முக்கிய கட்டமைப்புகள் மீது நடைபெறும் தாக்குதல்கள் சர்வதேச விநியோக சங்கிலியை பாதித்துள்ளன. தடையற்ற கடல் போக்குவரத்து மிக அவசியம்," என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானில் வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், அதற்காக நன்றி தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் போர் சூழ்நிலையில் இந்தியா அமைதி முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடியின் இந்த தொடர் ஆலோசனைகள், எதிர்காலத்தில் சமரச பேச்சுவார்த்தைகளுக்கான பாதையை திறக்குமா? என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+