ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி! அமைதியை மீட்டெடுக்க உதவுவதாக உறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் அமைதியை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார். அமைதியை மீட்டெடுக்க உதவுவதாக மோடி உறுதியளித்துள்ளார்.
என்னதான் ரஷ்யாவுக்கு இந்தியா நண்பனாக இருந்தாலும், போர் விஷயத்தில் சற்று விலகியே இருக்கிறது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அமைதியை விரும்புவதாக கூறி வருகிறது. குறிப்பாக உக்ரைனிடம் தொடர்ந்து பேசி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இன்றும் கலந்துரையாடல் நடந்திருக்கிறது.

இந்த கலந்துரையாடலில் போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என்றும், அமைதியை மீட்டெடுப்பது குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம் மோடி கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications