ஜிஎஸ்டி வரி குறைப்பு: மிடில் கிளாஸ் மக்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் - பிரதமர் மோடி
டெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பானது ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஏழைகள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை குறைந்த விலையிலேயே வாங்கலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. நாளை காலை முதல் ஜிஎஸ்டி சலுகைகள் அமலுக்கு வருகிறது. உங்களுக்குப் பிடித்தமான அத்தியாவசிய பொருள்களை குறைந்த விலைக கொடுத்து நாளை முதல் வாங்கலாம்.

ஏழைகள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை குறைந்த விலையிலேயே வாங்கலாம். ஜிஎஸ்சி சீர்திருத்தம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஜிஎஸ்டி வரி குறைப்பு பலனை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வியாபாரிகளும் ஆர்வமாக இருக்கின்றன. வர்த்தகத்தில் இருந்த சிக்கல்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த ஆண்டு ரூ. 2.5 லட்சம் கோடி சேமிக்கப்படும்.
சிறு, குறு தொழில்கள் மக்களுக்குத் தேவையான பொருள்களை உள்நாட்டில் தயாரிக்க முனைப்பு காட்ட வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்கள் தரத்தோடு இருக்க வேண்டும். உள்நாட்டு தாயரிப்புகளை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி பெறும். சர்வதேச அளவில் சிறந்த தரத்தோடு இந்திய நிறுவனங்கள் பொருள்களைத் தயாரிக்க வேண்டும். ஜிஎஸ்டி சீர்திருத்தம் இனி பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்க ஆரம்பிக்கும்.
உள்நாட்டு தயாரிப்பு பொருள்களை இந்தியர்கள் கர்வத்தோடு பயன்படுத்த வேண்டும். நாம் அனைவரும் இணைந்து இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. திங்கள்கிழமை காலை முதல் ஜிஎஸ்டி சலுகைகள் அமலுக்கு வரும் என்றார்.












Click it and Unblock the Notifications