வீடியோ கான்பரன்சில் மாஸ்க் அணிந்து பங்கேற்ற மோடி.. கொஞ்சம் உற்றுப் பார்த்தா.. ஆஹா இதுதானா விஷயம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் லாக்டவுன் நீடிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார்.

Recommended Video

    வீடியோ கான்பரன்சில் மாஸ்க் அணிந்த பிரதமர்... ஏன் தெரியுமா?

    இந்தியாவில் தற்போது 21 நாட்கள் லாக்டவுன் நடைமுறையில் உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

    அதேநேரம், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பிறருக்கும் பரவியதால், தொடர்ந்து நோயாளிகள் எண்ணிக்கை ஓரளவு உயர்ந்த வண்ணமும் இருக்கிறது.

    வீடியோ கான்பரன்ஸ்

    வீடியோ கான்பரன்ஸ்

    எனவே, லாக்டவுனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், மோடி இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதில், கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் என்னவென்றால், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசினாலும் கூட, முக கவசம் அணிந்து இருந்தார். பல மாநில முதல்வர்களும் கூட இதே போன்று முக கவசம் அணிந்தபடி பேசியதை பார்க்க முடிந்தது.

    மோடி மாஸ்க்

    மோடி மாஸ்க்

    வீடியோவில் பேசியபோதும், முக கவசம் அணிவதற்கு, காரணம், பொதுமக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகதான் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன. இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு அம்சம்.. பிரதமரின் முக கவசம். அது N95 போன்ற அதி பாதுகாப்பு வசதி கொண்டது கிடையாது. வீட்டிலேயே துணியால் தயாரிக்கப்பட்ட ஒருமுக கவசத்தைத்தான் அவர் அணிந்து இருந்தார்.

    காரணம்

    காரணம்

    பிரதமர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் நினைத்திருந்தால், முழு பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய உபகரணங்களை அணிய முடியும். எதற்காக வீட்டில் தயாரித்த மாஸ்க் அணிந்து உள்ளார் என்ற கேள்வி எழலாம். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக பாஜக தொண்டர்களிடையே, வீடியோ மூலம், உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அனைவரும் முக கவசம் அணியும் படி கேட்டுக் கொண்டார்.

    சாதாரண மாஸ்க்

    சாதாரண மாஸ்க்

    மெடிக்கல் ஷாப்புகளில் கிடைக்கக்கூடிய நவீன முகக் கவசங்கள் அல்லது அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மாஸ்க் போன்றவற்றை அணியாவிட்டாலும், வீட்டில் தயாரித்த முகக் கவசங்கள் அணியும்படி அவர் வலியுறுத்தினார். ஆனால் இந்த கோரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன.

    உற்பத்தி

    உற்பத்தி

    நாட்டில் முகக் கவசங்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. விரும்பினால் கூட மெடிகல்களில் கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய முடியாத அல்லது கூடுதலாக உற்பத்தி செய்ய முடியாத அரசு, வேறு வழியின்றி வீட்டிலேயே மாஸ்க்குகளை தயாரித்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது. இது நிர்வாகத் திறமையின்மைக்கு சான்று என்று விமர்சித்தனர்.

    பாதுகாப்புதானா

    இந்த நிலையில் பாஜக எம்பி ஸ்மிருதி இரானி, தனது வீட்டிலேயே முக கவசத்தை தயாரித்து அணிந்து கொள்வது போன்ற படத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார். இதோ இப்போது மோடியும் வீட்டில் தயாரித்த முக கவசத்தை அணிந்துள்ளார். இதன்மூலம் விமர்சனங்களுக்கு, ஆளும் தரப்பு மறைமுகமாக பதிலடி கொடுத்து வருகிறது என்று பார்க்கமுடிகிறது. அதே நேரம் இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை அறிவியல்பூர்வமாக விளக்கி விட்டால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+