UAE உள்பட 5 நாடுகளுக்கு மோடி பயணம்! பெட்ரோல் – டீசல் – கேஸ் விலை உயர்வுக்கு நடுவே முக்கிய மீட்டிங்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து 5 வெளிநாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கிஉள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்று அந்தநாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். குறிப்பாக நம் நாட்டில் பெட்ரோல், டீசல் கேஸ் விலை உயர்வுக்கு நடுவே முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் சந்தித்து பேச உள்ளது அதிக கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு இருநாடுகள் இடையேயான உறவுகளை மேம்படுத்தி வருகிறார். அந்த வகையில பிரதமர் மோடி 5 நாள் பயணமாக இன்று முதல் 5 நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் இருந்து இன்று தனி விமானத்தில் புறப்பட்டுள்ள பிரதமர் மோடி இன்று முதல் முதலில் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அங்கு அந்த நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஐக்கிய அரபு அமீர்கம் நம் நாட்டுடன் நெருங்கிய உறவில் உள்ளது.
இங்கிருந்து நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் மற்றும் சிஎன்ஜி கேஸ் உள்ளிட்டவை வருகின்றன. தற்போது ஈரான் போரால் இந்த சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உச்சமடைந்தள்ளது.
அதுமட்டுமின்றி சமீபத்தில் தான் ஐக்கிய அரபு அமீரகம் 'ஒபெக்' அமைப்பில் இருந்து வெளியேறியது. இந்த 'ஒபெக்' அமைப்பு என்பது கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலையை நிர்ணயம் செய்யும் அமைப்பாகும். தற்போது அதில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறி உள்ள நிலையில் இனி கச்சா எண்ணெய் உற்பத்தியில் யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இதனால் நம் நாட்டுக்கும் கூட அதிகளவில் கச்சா எண்ணெய் கிடைக்க வாய்ப்புள்ளது. விரைவில் நம் நாட்டில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வரலாம் எனும் நிலையில் மோடியின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த சந்திப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.
அதன்பிறகு இன்றே ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பிரதமர் மோடி நெதர்லாந்து செல்கிறார். அங்கு மே 1 7 ம் தேதி வரை இருப்பார். அப்போது பிரதமர் ராப் ஜெட்டன் உடன் சந்தித்த பேச உள்ளார். பிறகு மே 17 முதல் மே 18 வரை ஸ்வீடன் செல்லும் பிரதமர் மோடி அந்த நாட்டின் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனை சந்தித்து பேச உள்ளார்.
பிறகு மே 18 முதல் மே 19 வரை நார்வேயில் பிரதமர் மோடி இருப்பார். இந்தியா - நார்டிக் உச்சி மாநாடு மற்றும் இருததரப்பு இடையேயான உறவை வலுப்படுத்துவது பற்றி பிரதமர் மோடி பேச உள்ளார். இதையடுத்து மே 19 முதல் மே 20 வரை இத்தாலி சென்று சென்று அந்த நாட்டின் தலைவருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இத்தாலியில் சுற்றுப்பயணத்தை முடிக்கும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி திரும்புகிறார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications