டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முன்பு சீனா.. இன்று கொரோனாவிடம் சரணடைந்து விட்டார் மோடி.. ராகுல் காந்தி போட்ட அதிரடி டிவீட்

கொரோனாவிடம் பிரதமர் சரணடைந்துவிட்டார் என்று ராகுல் ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: "கொரோனாவிடம் சரணடைந்துவிட்டார் பிரதமர் மோடி" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார்... பேரழிவை எதிர்த்து போராட பிரதமர் மறுக்கிறார் என்றும், நாட்டின் புதிய பகுதிகளிலும் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் ராகுல் நேரடியாகவே தெரிவித்துள்ளது பாஜக தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

கல்வான் பள்ளத்துக்கு பகுதியில் நடந்த அத்துமீறல் சம்பவம் குறித்து விடாமல் தனது ஆதங்கத்தையும், எதிர்ப்பையும், விமர்சனத்தையும், பதிவிட்டு வருகிறார் ராகுல்காந்தி.

PM modi surrenders to coronavirus, says rahul gandhi

இந்த விவகாரம் தொடா்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், "இந்திய பகுதிகளை யாரும் ஆக்கிரமிக்கவும் இல்லை, இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவும் இல்லை" என்று பிரதமர் தந்திருந்த அந்த விளக்கத்தை இப்போது வரை ராகுல் ஏற்கவே இல்லை. தொடர்ந்து அது சம்பந்தமாக ட்வீட்களை போட்டு கேள்வி எழுப்பி வருகிறார்.

அத்துடன், வீர மரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் "நமது வீரா்களுக்காக பேசுங்கள்" என்ற ஒருபிரச்சார இயக்கத்தையும் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது.. இதனிடையே கொரோனா பரவல் குறித்தும், பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் குறித்தும் மத்திய அரசை கேள்வி எழுப்பி வருகிறார்.. தொற்று பரவலையும், பெட்ரோல் டீசல் விலையையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது என்று குற்றஞ்சாட்டினார்.. இந்த குற்றச்சாட்டை ஒரு வரைபடம் போட்டு விளக்கி ட்வீட் பதிவிட்டும் இருந்தார்.

தற்போது கொரோனா பரவல் குறித்து ராகுல் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "கொரோனாவிடம் சரணடைந்துவிட்டார் பிரதமர் மோடி.. பேரழிவை எதிர்த்து போராட மறுக்கிறார். நாட்டின் புதிய பகுதிகளிலும் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை" என்று கூறியுள்ளார்.

"கொரோனா தொற்று வெகு வேகமாக பரவிவரும்போது ஊரடங்கை தளர்த்திய ஒரே நாடு இந்தியாதான்" என்று ஏற்கனவே ராகுல் காந்தி விமர்சித்திருந்த நிலையில், தற்போது கொரோனாவிடம் பிரதமர் சரணடைந்துவிட்டார் என்று கூறியுள்ளது பாஜகவினரை கொதிப்பில் ஆழ்த்தி வருகிறது. இப்படித்தான் முன்பு சீனாவிடம் சரணடைந்த காரணத்தால் பிரதமரின் பெயர் நரேந்திர மோடி கிடையாது.. சரண்டர் மோடி என்று ஒரு டிவீட் போடடு பரபரப்பைக் கிளப்பியிருந்தார் ராகுல் காந்தி.

Recommended Video

    India-China Border பிரச்சினை பற்றி பேசாத Rajnath Singh | Rajnath Singh Russia Visit

    இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி கொரோனாவிடம் சரணடைந்திருப்பதாக அவர் போட்டுள்ள டிவீட்டால் பாஜகவினர் கடுப்பாகி பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

    English summary
    PM modi surrenders to coronavirus, says rahul gandhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X