ஆக்சிஜன் தேவை.. கொரோனா பரவலை முழுபலத்தோடு இந்தியா எதிர்கொள்கிறது.. மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை
டெல்லி: கொரோனாவை தனது முழு பலத்தோடு இந்தியா எதிர்கொண்டு வருகிறது, மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை இந்தியாவின் எல்லா மூலைக்கும் கொண்டும் செல்லும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று பிரதமர் மோடி மன் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் வானொலியில் பேசுவது வழக்கம். மக்களிடம் பேச விரும்பும் விஷயங்களை, முக்கிய தகவல்களை இதில் பிரதமர் மோடி பேசுவார்.
இதில் நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார். கொரோனா தொடங்கிய பின் பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

பேசினார்
மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி முன்கள பணியாளர்கள் சிலருடன் உரையாடினார். ஆக்சிஜன் கண்டெயினர் லாரி ஓட்டுநர், ஆக்சிஜன் எக்பிரஸ் ஓட்டுநர், ஏர்போர்ஸ் கேப்டன் ஆகியோரிடம் உரையாற்றினார். மருத்துவமனைகளுக்கு இவர்கள் ஆக்சிஜன் கொண்டு சென்ற பணிகள் குறித்தும், அவர்களின் அனுபவம் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்

உரை
அதன்பின் பிரதமர் மோடி தனது உரையில், கடந்த 100 நாடுகளில் மிகப்பெரிய பெருந்தொற்று கொரோனா வைரஸ். கொரோனாவை தனது முழு பலத்தோடு இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இரண்டாம் அலையின் தொடக்கத்தில் ஆக்சிஜன் தேவை இந்தியாவில் அதிகமாக இருந்தது. ஆக்சிஜன் தேவை இந்தியாவிற்கு பெரிய சவாலாக இருந்தது.

சவால்
இந்தியாவின் எல்லா பகுதிக்கும் ஆக்சிஜன் அனுப்புவது பெரிய சவாலாக இருந்தது. வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன், ஆக்சிஜன் டேங்கர்ஸ், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் விமானப்படையினரும், டிஆர்டிஓ பணியாளர்களும், ரயில்வே பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றினார்கள்.

ஆக்சிஜன்
இதற்காகவே ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் களமிறக்கப்பட்டன. இதில் ஒரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்பட்டது. எல்லா பெண்களும் இதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். எல்லா இந்தியர்களும் இதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.

சோதனை மையங்கள்
இந்தியாவில் தற்போது பல்லாயிரம் கொரோனா சோதனை மையங்கள் உள்ளன. கொரோனா தொடங்கிய போது ஒரே ஒரு கொரோனா டெஸ்ட் மையம் மட்டுமே இருந்தது. இப்போது தினமும் 20 லட்சம் கொரோனா சோதனைகள் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications