என் மனைவிக்கு ஜவ்வரிசி கிச்சடி செய்ய சொல்லிக் கொடுத்தவர் பிரதமர் மோடி.. பாஜக நிர்வாகி நெகிழ்ச்சி
டெல்லி: ஜவ்வரிசியால் கிச்சடியை எப்படி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிதான் தனக்கு சொல்லிக் கொடுத்ததாக சிம்லா பாஜக நிர்வாகியின் மனைவி தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பாஜக பொறுப்பாளராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி 1997 ஆம் ஆண்டு பதவி வகித்திருந்தார். அப்போது அந்த மாநில பாஜக தலைவராக இருந்தவர் தீபக் சர்மா.
இவர் ஆண்டுதோறும் சிம்லாவில் உள்ள ஜகு கோயிலுக்கு செல்வது வழக்கம். இதுவரை 32 ஆண்டுகளாக அந்த கோயிலுக்கு சென்றுவருகிறாராம். அந்த வகையில் தன்னுடன் பிரதமர் மோடியும் 10 அல்லது 12 முறை ஜகு கோயிலுக்கு வந்துள்ளாராம்.

நவராத்திரி
அவ்வாறு சிம்லா வந்த போது நவராத்திரி சமயம் என்பதால் தீபக் சர்மா தனது வீட்டுக்கு பாஜக மாநில பொறுப்பாளராக இருந்த நரேந்திர மோடிக்காக ஜவ்வரிசி கிச்சடியை தீபக்கின் மனைவி செய்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் கிச்சடி சரியாக வரவில்லை.

மனவருத்தம்
இதனால் மன வருத்தமடைந்த தீபக்கின் மனைவிக்கு ஜவ்வரிசி கிச்சடியை எப்படி சமைப்பது என்பது குறித்து சொல்லிக் கொடுத்தாராம். கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி சிம்லா சென்ற போது ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூரிடம், தீபக் சர்மா குறித்து விசாரித்துள்ளார்.

முதல்வர் ஜெய்ராம்
இதை முதல்வர் ஜெய்ராம் ஒரு பேரணியில் தெரிவித்தார். இதனால் தீபக் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அது போல் தீபக் சர்மா இன்னமும் ஜகு கோயிலுக்கு போகிறாரா இல்லையா என்பதையும் முதல்வர் ஜெய்ராமிடம் பிரதமர் மோடி கேட்டதை அறிந்து தீபக் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சிம்லா விசிட்
இதுகுறித்து சிம்லா மாநகராட்சியின் கவுன்சிலர் தீபக் சர்மா கூறுகையில் பிரதமர் என்னை நினைவில் வைத்துக் கொண்டு என்னை பற்றி கேட்டதை அறிந்ததும் என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. 1997- 98 காலகட்டத்தில் ஹிமாச்சலின் பொறுப்பாளராக இருந்த போது போஜனசாலா, தீபக் வைஷ்ணவ போஜனாலயா மற்றும் தனது வீட்டிற்கு வருவார்.

நவராத்திரி விரதம்
ஆண்டுதோறும் நவராத்தியின் போது மோடி இரு முறை விரதம் இருப்பார். மார்ச் மாதத்தில் வரும் நவராத்திரியின் போது வெறும் தண்ணீரை மட்டுமே அருந்துவார். அது போல் தசராவுக்கு முன்னர் வரும் நவராத்திரியின் போது அவர் பழங்களை மட்டுமே உண்வார். கடந்த 1997 ஆம் ஆண்டு நவராத்திரிக்காக சிம்லா வந்திருந்த போது என் மனைவி சீமாவை கிச்சடி சமைத்துக் கொடுக்க சொன்னார்.

பழைய நினைவுகள்
அது நன்றாக வராத நிலையில் மோடி சீமாவுக்கு எப்படி கிச்சடி தயார் செய்ய வேண்டும் என்ற பக்குவத்தை சொல்லிக் கொடுத்தார். அன்று முதல் இன்று வரை அவர் சொல்லிக் கொடுத்தது போன்றே கிச்சடியை சமைத்து வருகிறார் சீமா என பழைய நினைவுகளை தீபக் சர்மா அசைபோட்டார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications