ரெடியான மோடி.. டெல்லியில் நாளை நடக்க போகும் அவசர மீட்டிங்.. டிரம்ப்பிற்கு பதிலடி தர முடிவு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆகஸ்ட் 27ம் தேதி முதல் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படவுள்ளது. இந்த வரிகள் அமலுக்கு வருவதற்கு 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும் என்று டிரம்ப் அரசு கூறி உள்ளது. ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 10 அன்று அமலுக்கு வந்த நிலையில், நாளை மறுநாள் முதல் கூடுதல் வரி அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும்.

Donald Trump USA

வரி விதிப்பு மட்டுமின்றி, ரஷ்ய ராணுவ உபகரணங்களை இந்தியா வாங்கியதற்கும் டிரம்ப் அபராதம் விதித்தார். அமெரிக்காவின் இந்த உயர் வரிவிதிப்பின் தாக்கத்தை எதிர்கொள்ளும் இந்திய ஏற்றுமதியாளர்கள் உடன் பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்த உள்ளது. இது தொடர்பாக ஆகஸ்ட் 26 அன்று பிரதமரின் அலுவலகம் ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. பிரதமரின் முதன்மை செயலாளர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி - இந்தியா ஏற்றுமதி

அதை தொடர்ந்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்தியாவின் பல்வேறு ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களுடன் கலந்துரையாடி வருகிறது. ஏற்கனவே உள்ள 25% வரியின் தாக்கம் குறித்து அறிய இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. இதனால் இந்திய நிறுவனங்கள் பல கடுமையான இழப்பை சந்திக்க தொடங்கி உள்ளன. அந்த இழப்புகள் தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள அதிக வரி விதிப்பு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமையும் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் துவ்வுரி சுப்பாராவ் எச்சரித்துள்ளார். ஜவுளி மற்றும் ரத்தினங்கள் போன்ற தொழிலாளர் மிகுந்த ஏற்றுமதித் துறைகளில் 50% அமெரிக்க வரி விதிப்பால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 2% மதிப்பிலான ஏற்றுமதிகள் பாதிக்கப்படும். இதனால் பலர் வேலைகளை இழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கும்

இந்த வரி விதிப்பால் இந்தியாவின் வளர்ச்சி ஒரு வருடத்திற்குள் 20-50 அடிப்படை புள்ளிகள் வரை குறையக்கூடும்.. இதனால் பலர் வேலைகளை இழக்க நேரிடும் என சுப்பாராவ் தெரிவித்தார். இந்தியாவின் முன்னாள் நிதிச் செயலாளராகவும் பணியாற்றிய சுப்பாராவ், அமெரிக்க அதிபரால் 'செயலிழந்த' பொருளாதாரம் என முத்திரை குத்தப்படுவது இந்தியாவின் நற்பெயருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், ஜவுளி, காலணி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற விலைப் போட்டி மற்றும் பெருமளவு உற்பத்திக்கு பெயர் பெற்ற தொழிலாளர் மிகுந்த துறைகளில் லாப வரம்புகள் குறையும் இந்த துறைகள் பாதிக்கப்படும், ஆர்டர்கள் திசை திருப்பப்படும், வேலைகள் பறிபோகும், மற்றும் ஆலைகள் சுருக்கப்படும். இதன் தாக்கம் சமத்துவமற்றதாக இருக்கும், வருமான ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும்., என்றும் வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் இந்த வரிகள் அமலுக்கு வருவதற்கு 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இதையடுத்து டிரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+