140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா ஏன் செய்யக் கூடாது! விஸ்வகர்மா திட்டத்தில் பிரதமர் மோடி கேள்வி
டெல்லி: மாநாடுகள் மூலம் சுற்றுலா முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். அடுத்த நாளே ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது.

அதில் இந்த திட்டத்திற்கு ரூ 13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நாடு முழுவதும் விஸ்வகர்மா ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டது.. இன்றைய தினம் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: பிஎம் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வங்கி உத்தரவாதம் ஏதுமின்றி ரூ 3 லட்சம் வரை மத்திய அரசு கடன் வழங்கும். இதற்கான வட்டியும் மிகவும் குறைவு. முதலில் ஒரு லட்சம் கடனாக அளிக்கப்படும், அந்த தொகையை திருப்பி செலுத்தியதும் மீதமுள்ள 2 லட்சம் ரூபாய் கடனாக கொடுக்கப்படும்.

உலகில் மாநாடுகள் மூலமான சுற்றுலா முதலீடு உயர்ந்து கொண்டே வருகிறது. உலகில் இந்த துறையின் மதிப்பு ரூ 25 லட்சம் கோடியாகும். ஒவ்வொரு ஆண்டும் 32 ஆயிரம் பெரிய கண்காட்சிகளும் எக்ஸ்போக்களும் நடக்கின்றன. வெறும் 2 முதல் 5 கோடி மக்கள்தொகை கொண்ட சிறிய நாடுகள் எல்லாம் நடத்துகின்றன. ஆனால் நம் நாட்டின் மக்கள்தொகை 140 கோடி ரூபாயாகும்.
வழக்கமான சுற்றுலா பயணிகலை விட இந்த மாநாடுகள் மூலம் சுற்றுலாவுக்கு வருகை தருவோர் அதிக பணத்தை செலவழிக்கிறார்கள். இதில் இந்தியாவின் பங்களவிப்பு வெறும் 1 சதவீதம்தான். டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் யசோபூமி உள்ளிட்டவை மிகப்பெரிய மாநாடுகள் மூலமான சுற்றுலா முதலீட்டுக்கு மிகப்பெரிய மையமாகும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய விரும்புவோர் பொது சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும். இதன்படி பிஎம் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ 15 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும். முதல் தவணையாக ரூ 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இரண்டாவது தவணையாக ரூ 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கூடிய கடன் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் கைவினை கலைஞர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளிக்கப்படும். கைவினை கலைஞர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.

கைவினை கலைஞர்களின் தயாரிப்புகளை உள்நாடு, வெளிநாடு விற்பனை சங்கிலியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலணி தைப்பவர், தச்சர், கொல்லர், பொற்கொல்லர், கொத்தனார், கூடை பின்னுவோர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், பூட்டு தயாரிப்பவர் உள்ளிட்டோர் விஸ்வகர்மா திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் கடன் கேட்டு அது அங்கீகரிக்கப்பட்டால் உடனடியாக கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நீங்கள் 3 முதல் 5 ஆண்டு காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications