“சமஸ்கிருதம் புறக்கணிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது” பிரதமர் நரேந்திர மோடி வேதனை!
டெல்லி: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும், சுதந்திரத்திற்குப் பின்னரும் சமஸ்கிருதம் புறக்கணிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்திருக்கிறார். மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' உரையாடலின்போது இக்கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.
அதில் அவர் மேலும் பேசியதாவது, "ஒரு காலத்தில் சமஸ்கிருதம் வெறும் தகவல் தொடர்பு மொழியாக மட்டுமல்லாமல், ஆராய்ச்சிகளுக்கும் நாடகங்களுக்கும் பயன்பட்டது. சமஸ்கிருதம் என்றாலே வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், பழங்கால ஞானம், அறிவியல், ஆன்மீகம் மற்றும் தத்துவம் ஆகியவைதான் நினைவுக்கு வரும்.

ஒரு காலத்தில் சமஸ்கிருதம் ஒரு தகவல் தொடர்பு மொழியாகவும் திகழ்ந்தது. அந்த காலகட்டத்தில், சமஸ்கிருதத்தில் ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டன. நாடகங்களும் சமஸ்கிருதத்தில் அரங்கேற்றப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும், சுதந்திரத்திற்குப் பின்னரும் சமஸ்கிருதம் புறக்கணிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஆயினும், சமஸ்கிருதம் மீதான இந்த புறக்கணிப்பு முடிவுக்கு வந்து, தற்போது இளைஞர்களிடையே புதிய ஆர்வம் பிறந்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, அடிமைத்தனக் காலத்திலும் சுதந்திரத்திற்குப் பின்னரும் சமஸ்கிருதம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டது. இதனால், இளைஞர்களின் சமஸ்கிருத ஆர்வம் குறைந்து போனது. ஆனால், காலம் மாறுகிறது, சமஸ்கிருதத்திற்கும் நல்ல காலம் வந்துவிட்டது. கலாச்சாரம் மற்றும் சமூக ஊடக உலகம் சமஸ்கிருதத்திற்கு ஒரு புதிய வாழ்வு தந்துள்ளது. இப்போதெல்லாம், பல இளைஞர்கள் சமஸ்கிருதம் தொடர்பாக மிகவும் சுவாரஸ்யமான பணிகளைச் செய்து வருகிறார்கள்.
சமூக ஊடகங்களுக்குச் சென்றால், இளைஞர்கள் சமஸ்கிருதத்தில் பேசும் பல ரீல்களைக் காணலாம். பலர் தங்கள் சமூக ஊடக சேனல்கள் மூலம் சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு இளம் படைப்பாளிதான் பாய் யாஷ் சலுங்கே. யாஷ் ஒரு படைப்பாளி மற்றும் கிரிக்கெட் வீரர் என்பது சிறப்பு. அவர் சமஸ்கிருதத்தில் பேசிக்கொண்டே கிரிக்கெட் விளையாடும் ரீல் மிகவும் பிரபலமாகியுள்ளது" என்று கூறியுள்ளார்.
அதேபோல கமலா மற்றும் ஜான்வி என்ற இரண்டு சகோதரிகளின் பணியையும் அவர் பாராட்டினார். இந்த சகோதரிகள் ஆன்மீகம், தத்துவம் மற்றும் இசை தொடர்பான கன்டென்டுகளை உருவாக்குகிறார்கள். சமஸ்கிருதத்தை இளைஞர்களிடையே மேலும் ஈர்க்கும் வகையில் நகைச்சுவையுடன் கொண்டு சேர்க்கும் "சமஸ்கிருத சத்ரோஹம்" போன்ற பிற படைப்பாளிகள் குறித்தும் பிரதமர் பேசினார். இன்ஸ்டாகிராமில் இந்த சேனலை நடத்தும் இளைஞர் சமஸ்கிருதம் தொடர்பான தகவல்களை மட்டும் வழங்காமல், நகைச்சுவையான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
"இந்த சமஸ்கிருத காணொளிகளை இளைஞர்கள் மிகவும் விரும்புகிறார்கள். உங்களில் பலர் சமஷ்டியின் வீடியோக்களையும் பார்த்திருக்கலாம். சமஷ்டி தனது சமஸ்கிருதப் பாடல்களைப் புதிய வழிகளில் வழங்குகிறார். மற்றொரு இளம் படைப்பாளி பாவேஷ் பீம்நாதானி. பாவேஷ் சமஸ்கிருத ஸ்லோகங்கள், ஆன்மீக தத்துவம் மற்றும் கோட்பாடுகள் பற்றி பேசுகிறார்" என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
நாகரிகத்தின் மரபுகளை மொழிதான் சுமந்து செல்கிறது. சமஸ்கிருதம் இந்த கடமையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செய்து வருகிறது. சில இளைஞர்கள் இப்போது சமஸ்கிருதத்திற்கு கடமையாற்றி வருகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
-
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது












Click it and Unblock the Notifications