75வது சுதந்திர தினம்: ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்க.. பிரதமர் மோடி அழைப்பு
டெல்லி: இந்தியாவில் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை விரட்டி நாம் 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரம் பெற்றோம். ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் ஏராளமானவர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
இவர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையிலும், இந்தியா சுதந்திர நாடு என பெருமை கொள்ளும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடி வருகிறோம்.

75 வது சுதந்திர தினம் கொண்டாட்டம்
அதன்படி 2022 ஆகஸ்ட் 15ல் நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். 75வது சுதந்திர தினத்தை கடந்த ஓராண்டுகளாக கொண்டாடி வருகிறோம். இதற்காக 'அசாதி கா அம்ரித் மோட்சாவ்' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த சுதந்திர தினத்தை வரும் ஆகஸ்ட் 15ல் வெகுவிமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அழைப்பு
இதற்கான ஏற்பாட்டை மத்திய அரசு சிறப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் தான் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு இன்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது 75 வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

2 நாள் வீடுகளில் தேசியக்கொடி
இந்த ஆண்டு நாம் 'அசாதி கா அம்ரித் மோட்சாவ்' நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதை ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) இயக்கமாக மாற்றி வலுப்படுத்த வேண்டும். இதனால் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுங்கள். இந்த இயக்கம் தேசியக்கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும்'' என கூறியுள்ளார்.

பூஸ்டர் டோஸ் அறிவிப்பு
முன்னதாக 75 வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டில் 18 வயது முதல் 59 வயதுக்குள்ளான பொதுமக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம் என்ற அறிவிப்பு கடந்தவாரம் வெளியானது. இதன்மூலம் பொதுமக்கள் செப்டம்பர் 28 வரை இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அரசு மருத்துவமனை, முகாம்களில் செலுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications