உற்றுப்பாருங்க.. சீட்டாவை போல் உடை அணிந்து கவனம் ஈர்த்த பிரதமர் மோடி.. பிறந்தநாளில் டிரெண்ட்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்தநாளையொட்டி நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சீட்டாக்களை இன்று மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார். இந்தவேளையில் பிரதமர் நரேந்திர மோடி சீட்டாவை போல் துண்டு அணிந்து டிரெண்ட்டாகி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி.. வித்தியாசமான ஆடை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் உலக தலைவர்களில் ஒருவர். இவர் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்ப அல்லது நிகழ்ச்சி நடைபெறும் இடம், மாநிலத்தில் பின்பற்றப்படும் கலாசார உடைகளை அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் ஆடை தொடர்பான விவாதம் அடிக்கடி எழுந்து வருகிறது. ஒரு காலத்தில் ஆடை தொடர்பான விஷயத்தில் மேற்கத்திய நாடுகளான அமெரிக்க அதிபர், பிரிட்டன் அரச குடும்பத்தினர் தான் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துள்ளார்.

பிரதமர் மோடியின் உடை
பிரதமர் நரேந்திர மோடியின் ஆடை அலங்காரத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட பல வெளிநாட்டு தலைவர்கள் பாராட்டியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட வகை ஆடையை மட்டும் அணியாமல் வெவ்வேறு வகையான ஆடைகளை மிகவும் நேர்த்தியாக அணிவது தான் இதற்கு காரணமாகும். பிரதமர் மோடியின் ஆடை அலங்காரம் என்பது இந்திய மாநிலங்கள், வெளிநாடுகளின் கலாச்சாரத்தை சார்ந்தும், நிகழ்ச்சியின் சாராம்சத்தை பொறுத்து தான் அமையும்.

சுதந்திர தின உடைகள்
மேலும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு விதமான ஆடைகளை அவர் அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் சில வேளைகளில் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறார். இந்தியா சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களின்போதும் தேசியக்கொடியில் இருக்கும் மூவர்ணத்தில் தலைப்பாகை அணிந்தது கூட கவனத்தையும் ஈர்த்தது.

தமிழக பாரம்பரிய உடை
மேலும் தமிழகத்தில் மாமல்லபுரத்தில் வைத்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தபோது தமிழகத்தின் பாரம்பரிய ஆடையான வேஷ்டி சட்டை அணிந்து அசத்தினார். மேலும் தமிழக தேர்தல் பிரசாரத்திலும் வேஷ்டி சட்டை அணிந்து பேசும் பொருளாகி உள்ளார். சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்து முடிந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போதும் கூட வேஷ்டி சட்டையை பிரதமர் மோடி அணிந்திருந்த நிலையில் அவர் தோளில் அணிந்திருந்த துண்டில் செஸ் போர்ட்டின் கருப்பு-வெள்ளை கட்டங்களில் டிசைன் இருந்தது.

சீட்டாக்களை திறந்து விட்ட மோடி
இதன் தொடர்ச்சியாக தான் இன்றும் பிரதமர் நரேந்திர மோடி தான் அணிந்திருந்த ஆடை மூலம் பேசும் பொருளாகி உள்ளார். இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் பிரதமர் நரேந்திர மோடி நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 5 ஆண், 3 பெண் என மொத்தம் சீட்டாக்களை இன்று மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தொப்பி அணிந்து கையில் கேமராவுடன் தோன்றினார்.

துண்டில் இருந்த அடையாளம்
இந்த நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சீட்டாக்களின் உடலில் உள்ள கருப்பு புள்ளிகளை குறிப்பிடும் வகையில் துண்டு ஒன்றை அணிந்திருந்தார். அதாவது பிரதமர் மோடி இன்று அணிந்திருந்த துண்டின் காவி நிறத்தில் சீட்டாக்களின் உடலில் உள்ள கருப்பு புள்ளிகளை குறிக்கும் வகையிலான புள்ளி அடையாளங்கள் இருந்தன. இது அவர் அணிந்திருந்த துண்டை உற்றுப்பார்த்தால் நன்றாக தெரியும். தற்போது இது டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

70 ஆண்டுக்கு பிறகு சீட்டா
இந்தியாவில் இதற்கு முன்பு சீட்டாக்கள் அதிகளவில் இருந்தன. வேட்டை காரணமாக சீட்டாக்கள் முற்றிலுமாக அழிந்தன. மத்திய பிரதேச மாநிலத்தின் ஒருபகுதியாக சத்தீஷ்கர் இருந்தபோது அங்கு 1947ல் ஒரு சீட்டா இருந்தது. அதன்பிறகு அதுவும் இறந்தது. இதனால் இந்தியாவில் சீட்டா இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக 1952ல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நமீபியாவிடம் இருந்து இந்தியாவுக்கு சீட்டாக்கள் கொண்டு வர ஒப்பந்தம் செய்யபட்டது. அதன்படி இன்று 8 சீட்டாக்கள் இந்தியாவில் தனது கால்தடத்தை பதித்துள்ளது. முன்னதாக நமீபியாவில் இருந்து இந்த சீட்டாக்களை இந்தியா அழைத்து வருவதற்கான சிறப்பு வசதி கொண்ட சரக்கு விமானம் பி747 எனும் விமானத்தில் முன்பகுதி புலியின் முகம் போல் விமானத்தின் முன்பகுதி வரையப்பட்டிருந்தது. இந்த விமானத்தின் மூலம் நமீபியாவில் இருந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு சீட்டாக்கள் இந்தியாவில் கால்தடத்தை பதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications