அடுத்த 4 வாரங்கள்.. மத்திய அரசு முக்கிய வார்னிங்.. பிரதமர் மோடி முதல்வர்களுடன் நாளை ஆலோசனை
டெல்லி: 4 மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் இனி நாடு தழுவிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவி வருவதாக எச்சரித்துள்ள மத்திய அரசு, அடுத்த 4 வாரங்கள் மிகவும் முக்கியமான காலகட்டம் என்று அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா 2வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. 20 ஆயிரமாக சரிந்திருந்த தினசரி பாதிப்பு தற்போது மீண்டும் ஒரு லட்சத்தை அடைந்துள்ளது இதனால், டெல்லி, மகாராஷ்டிரா, உள்பட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
வைரஸ் பரவல் நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகம் உள்ளது. மகாராஷ்டிரா உள்பட 11 மாநிலங்களில் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே, கொரோனா பரவல் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசித்து இருந்தார். அதைத் தொடர்ந்து நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

தேர்தல் முடிந்துவிட்டது
இந்த கூட்டத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடப்பதால் நாடு தழுவிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்த நிலையில், இனி அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்கிறார்கள்.

2 வது அலையின் வேகம்
இந்நிலையில், கொரோனா 2வது அலை தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் மற்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூட்டாக நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது வி.கே.பால் கூறுகையில், ''நாட்டில் தொற்று நோய் சூழல் மிக மோசமான கட்டத்தில் உள்ளது. தினசரி பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. முதல் அலையை காட்டிலும் கொரோனா 2வது அலையின் வேகம் மிக அதிகமாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்த வழக்கம் போல் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

கர்நாடகாவில் ஒன்று
2வது அலையை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். குறிப்பாக, அடுத்த 4 வாரங்கள் மிக மிக முக்கியமானது. இதில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்'' என்றார். சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், ''சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் உச்சகட்ட பாதிப்பு உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ளதாக 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், மகாராஷ்டிராவில் 7 மாவட்டங்களும், கர்நாடகாவில் ஒன்று, டெல்லி ஒரு மாவட்டம் ஆகியவை உள்ளன. மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது,'' என்றார்.

உயர்மட்டக்குழு
மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கரில் வைரஸ் பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் பல்வேறு நிபுணர்களை கொண்ட உயர்மட்ட மருத்துவ குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இக்குழுவினர் மகாராஷ்டிராவில் 30 மாவட்டத்திலும், சட்டீஸ்கரில் 11 மாவட்டத்திலும், பஞ்சாப்பில் 9 மாவட்டத்திலும் சென்று வைரசை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications