நாளை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.. தடைகளை கடந்து ஏற்பாடுகள் தீவிரம்!
டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா காண கோலாகலமாக தயாராகி வருகிறது. நாளை பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவின் போது நாடாளுமன்றத்திற்குள் செங்கோலை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 1927ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பழமையான கட்டத்தின் பாதுகாப்பு குறைபாடு, இடவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற நிகழ்வுகளை நடத்த புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்துக்கு பிரதமர் மோடி 2020, டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடிகொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் சுமார் 888 பேர் வரையும் , மாநிலங்களவையில் 300-க்கும் அதிகமான பேர் அமரும் வகையிலும், இரு அவைகளும் பங்கேற்கும் கூட்டு கூட்டத்தின்போது 1,280 உறுப்பினர்கள் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி, நாளை திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க கூடாது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
'மரபை மீறி, நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், பிரதமர் மோடியே திறந்துவைப்பது அவமானம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்' எனக் கண்டனம் தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இதற்கிடையே கன்னியாகுமரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்சுகின் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்காதது அவரது மதிப்பை குறைப்பது மட்டுமின்றி அரசமைப்பு சட்டத்தையும் மீறுவதாக உள்ளது. எனவே, புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதியை கொண்டு திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இதுபோன்ற மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறக்க எந்த தடையும் இல்லை.
இதனால், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். அத்துடன், சுதந்திரத்தின் போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக பிரிட்டிஷாரிடம் இருந்து நேரு பெற்றுக் கொண்ட செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவையடுத்து நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து டெல்லி காவல்துறையின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகள் அமைப்பது, டெல்லி எல்லைப் பகுதியில் வாகன சோதனை சாவடிகளை அமைப்பது, கூடுதல் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பாக முழுமையாக ஆலோசிக்கப்பட உள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications