10 நாளில் 4 முறை.. நெருங்கும் உ.பி.தேர்தல்.. அடுத்தடுத்து "ட்ரிப்" போடும் பிரதமர் மோடி.. சூடான களம்
டெல்லி: உத்திரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி 28ஆம் தேதிக்குள் அடுத்தடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பதவி ஏற்று ஆட்சி நிறைவடையும் தருவாயில் மக்கள் அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே உத்திரப்பிரதேசத்தில் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பாஜக போலவே காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரக் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு சமமாக காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகியோரும் களத்தில் முன்னணியில் இருக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்தில் சில காலமாக மாநிலத்தின் அரசியல் களத்தில் தீவிரமாக பங்காற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நேற்று ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச் சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் லட்சிய திட்டமான கங்கா எக்ஸ்பிரஸ்வே ஆறு வழிச்சாலையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து சுற்றுப்பயணம்
மீரட்டில் உள்ள பிஜோலியில் தொடங்கி ஹாபூர், புலந்த்ஷாஹர், அம்ரோஹா, சம்பல், படவுன், ஷாஜஹான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர் வழியாக பிரயாக்ராஜில் உள்ள ஜூடாபூரில் முடிவடையும் 594 கி.மீ. கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகளை இணைக்கிறது. இந்த நிலையில் டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் பிரதமர் மோடி மீண்டும் மூன்று முறை உத்தரப்பிரதேசம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டிசம்பர் 21ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் காசிக்கு செல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

காசியில் மீண்டும் பிரதமர்
ஆனால் எந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறித்து இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. தற்போது கிடைத்துள்ள தகவல் இதன்படி பிரயாக்ராஜில் நடைபெறவுள்ளநிகழ்ச்சிக்கு இரண்டரை லட்சம் பெண்கள் அழைக்கப்பட்டுள்னர் என தெரிய வந்துள்ளது. டிசம்பர் 23-ஆம் தேதி மீண்டும் காசிக்கு பிரதமர் சொல்கிறார். இங்கு லஹர்தர முதல் மோகன்சராய் வரையிலான நான்கு வழிச்சாலைகள் மற்றும் 6 வார்டுகளில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசியல் முக்கியத்துவம்
அதே நாளில் காசி மக்களுக்கு 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள மதிப்புள்ள நலத்திட்டங்களை தொடங்குவார் என்றும், டிசம்பர் இருபத்தி எட்டாம் தேதி கான்பூரில் இருக்கும் மெட்ரோ நிலைய சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அடுத்தடுத்து மோடி உத்தரப்பிரதேசம் செல்வது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications