தமிழக மீனவர் பிரச்சனையில் திடீர் திருப்பம்? பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில் அதிரடி முடிவு?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின் போது இருதரப்பும் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தமிழக மீனவர் பிரச்சனையில் மிக முக்கியமான தீர்வும் மோடியின் இந்த பயணத்தின் போது உருவாக்கப்படலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் அடுத்த மாதம் அதாவது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத், மோடியின் இலங்கை பயணத்தின் போது இருதரப்புக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலை சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளிமின் உற்பத்தி நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என்றார்.
இலங்கையின் அதிபராக அனுர குமார திசநாயக்க பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு முதலில் வருகை தந்தார். அப்போது இந்தியா- இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் விவாதிக்கபட்டன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் பிரதமர் மோடியின் பயணத்தின் போது இறுதி செய்யப்பட உள்ளன.
மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு?
பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின் போது, தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அல்லது தீர்வு முயற்சிகள் எட்டப்படலாம் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மீனவர்கள், இலங்கையால் கைது செய்யப்படுவது- சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது மிகப் பெரும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இதனால் தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
அண்மையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழ்நாடு மற்றும் புதுவை மீனவர்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, மீனவர்களின் கோரிக்கைகள் விவரிக்கப்பட்டன.
இந்த பின்னணியில்தான், பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின் போது மீனவர் பிரச்சனைக்கும் ஆக்கப்பூர்வமான தீர்வு எட்டப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications