சர்வதேச என்.ஜி.ஒ.க்கள்தான் இந்தியாவில் போராட்டங்களை நடத்துகின்றன.. மோடி பரபரப்பு பேட்டி
டெல்லி: சர்வதேச என்.ஜி.ஒ.க்கள்தான் இந்தியாவில் போராட்டங்கள் நடைபெற பெரிதும் ஆதரவளிக்கின்றன என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோடி அந்த ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் எதிர்கட்சிகள் கூறும் பொய்யான தகவல்களுக்குத்தான் தான் பதில் கூறுவதாகவும், எதிர்கட்சிகளை தாக்கி பேசுவதில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கு உதாரணமாக ஐ.என்.எஸ் விராட் பற்றி குறிப்பிட்ட அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், நாட்டின் ராணுவம் ஒன்றும் பிரதமர் மோடியின் சொத்து அல்ல என்று கூறியுள்ளார்.

ராகுலின் இந்த பதில்தான் ஐ.என்.எஸ் விராட் குறித்த விவாதம் ஆரம்பிப்பதற்கான புள்ளி என்று கூறியுள்ளார். ராகுல் தன்னுடைய இமேஜை கெடுக்க முயல்வதாகவும் அது ஒருபோதும் பலிக்காது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். மம்தா பேனர்ஜியும், சந்திரபாபு நாயுடுவும் உங்களை தாக்கிப் பேசி வருகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி, தான் எதிர்கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அதில் சிலர் உண்மையை ஏற்றுக்கொள்வதாகவும் சிலர் ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஃபனி புயலின் போது உடனடியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை உடனடியாக தொடர்பு கொண்டு பேசியதாகவும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும்போதும் கூட , அங்கு இயற்கை பேரிடர் நிகழ்ந்தபோது, 2 மணிநேரத்திற்கு ஒருமுறை, அங்கு நிலவும் சூழல் குறித்து விசாரித்த வண்ணம் இருந்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார் . நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்கள் குறித்து பேசியவர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியால் பெரும்பான்மை அரசை அமைக்க இயலவில்லை. மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியை காட்டிலும் நாங்கள் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம். நாங்கள் தோல்வி அடையவில்லை. அதிக பொருட்செலவு செய்து அவர்கள் வெற்றியை தங்கள் வசமாக்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேச சட்டசபை தோல்வியை தொடர்ந்து பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, பிரதமர்- விவசாயிகள் திட்டம், அமைப்புசாரா நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் விவகாரத்தில் 5 லட்சம் வரை வருமானவரி விலக்கு உள்ளிட்ட இத்திட்டங்களை கொண்டுவர காரணமென்ன என்ற கேள்விக்குப் பதிலளித்த மோடி , எங்கள் அரசின் 2 ஆண்டுகால கோப்புகளை ஆராய்ந்து விட்டு இது போன்ற கேள்விகளை கேளுங்கள் என்றும் மராத்தா, ஜாவ், குஜ்ஜார். பட்டிதார் போராட்டங்களின் பின்புலங்களை ஆராயுங்கள். உண்மை என்னவென்று தங்களுக்கு புரியும் என்றும் பதிலளித்துள்ளார்.
நாட்டில் அசாதாரண நிலையை நிலவச் செய்ய, இங்குள்ள என் ஜி ஓக்கள், சர்வதேச நிதி பங்களிப்புடன் போராட்டங்களை நடத்திவருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். 'டீமானிடைசேஷன் திட்டம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று ஒருபோதும் தான் கூறியது கிடையாது. கறுப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்களை கண்டறியும் நடவடிக்கையாகவே நாங்கள் டீமானிடைசேஷன் திட்டத்தை கருதுகிறோம். இதனை நாங்கள் ஒழுங்குபடுத்தும் காரணியாகவே உணர்கிறோம். வரி ஏய்ப்பை தடுத்தல், டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் மூலம் சிறந்த பொருளாதார நிலையை ஏற்படுத்துதல் . 2013-14ம் நிதியாண்டில் 3.8 கோடிகளாக இருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2017-18ம் நிதியாண்டில் 6.8 கோடிகளாக அதிகரித்துள்ளது. இது 80 சதவீதம் அதிகம் ஆகும்.
இஸ்லாமியர்கள் பா.ஜ. ஆட்சிக்காலத்தில் பய உணர்வுடன் இருப்பதாக சொல்வதெல்லாம், ஓட்டுவங்கி அரசியல் நடத்துபவர்கள் கூறும் கட்டுக்கதை. மதசார்பற்ற ஆட்சியை வழங்குவதாக சொல்பவர்கள் ஏன் தலைமைப் பதவிகளை சிறுபான்மையின மக்களுக்கு வழங்குவதில்லை. ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர். அந்தப் பதவியை ஒரு முஸ்லிம் வகிக்க ஏன் முடியவில்லை? அவர் ஏன் அதை உறுதி செய்யவில்லை என்றும் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications