'அவங்க ஸ்டைலில் கலக்கிட்டாங்க'.. 'இந்திய அணியை எண்ணி பெருமையாக இருக்கு'.. பிரதமர் மோடி பூரிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டி20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 11 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலக கோப்பையை வென்றதை தற்போது நாடே கொண்டாடி வருகிறது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி உள்ளது இந்திய அணி. இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றியை எண்ணி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Narendra Modi T20 World Cup India

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நம் இந்திய அணி அவர்களது ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு கொண்டு வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்திய அணியை எண்ணி பெருமை கொள்கிறோம். இது வரலாற்று சிறப்பு மிக்கது" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்க எதிராக விராட் கோலி எடுத்த அதிரடியான 76 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதேபோல் கடைசி நேரத்தில் அதிரடியாக பந்து வீசிய, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற பந்துவீச்சாளர்களின் முயற்சியும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக கடைசி ஓவரில் சூர்யா குமார் யாதவ் சிக்சர் லைனில் பிடித்த அந்த கேட்ச் தான் போட்டியை இந்திய அணிக்கு சாதமாக மாற்றியது.

தென்னாப்பிரிக்கா உடனான இறுதி போட்டியில் வெற்றி என்பது கடைசி வரை சாதமாக இல்லாத நிலையிலும் மனம் தளராமல் போராடி இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார் விராட் கோலி. தொடர் நாயகன் விருதை பும்ரா வென்றார். அவர் மொத்தம் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியாவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய அணி கடைசி வரை விடாமல் போராடிய குணம் மற்றும் திறமையை வெகுவாக பாராட்டினார். மேலும் தேசத்திற்கு இந்திய வீரரகள் பெருமை சேர்த்துள்ளதை தனது மகிழ்ச்சியாக வெளிப்படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இது உண்மையில் அற்புதமான உலகக் கோப்பை வெற்றி. தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள்.. சூர்யா, என்ன ஒரு புத்திசாலித்தனமான கேட்ச்! ரோஹித், இந்த வெற்றி உங்கள் தலைமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.. ராகுல் டிராவிட், இனி உங்கள் வழிகாட்டுதலை இந்திய அணி தவறவிடும் என்று எனக்குத் தெரியும் (பயிற்சியாளர் பதவியில் ராகுல் டிராவிட் விலகுகிறார்) . இந்திய அணி நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் உலக கோப்பையை இந்திய அணி வென்றதை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து , இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள். பல தலைவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+