எங்கள் குடும்பத்தையே அவமானப்படுத்திய பிரதமர் மோடி! மேடையிலேயே உருகிய பிரியங்கா காந்தி..கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி எங்கள் குடும்பத்தையே அவமானப்படுத்தி உள்ளார். அவர் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை. யாருமே அவரை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றவில்லையே என உருக்கமாக பிரியங்கா காந்தி, பிரதமர் ஒரு கோழை அவர் திமிர் பிடித்தவராக உள்ளார் என கடுமையாக விம்ரசனம் செய்தார்.

மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி எதிரான அவதூறு வழக்கில் அவருக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்க 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து ராகுல் காந்தி நேற்று முன்தினம் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை லோக்சபா செயலகம் பிறப்பித்தது. தண்டனை வழங்கப்பட்ட அடுத்த 24 மணிநேரத்தில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

144 தடை உத்தரவு

144 தடை உத்தரவு

இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியது. டெல்லியில் ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சங்கல்ப் சத்தியாகிரஹம் நடத்தி போலீசார் அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.

பிரியங்கா காந்தி அட்டாக்

பிரியங்கா காந்தி அட்டாக்

இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் தடையை மீறி டெல்லி ராஜ்காட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்பட பல தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் பிரியங்கா காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பிரியங்கா காந்தி கடுமையாக பாஜகவினரை தாக்கி பேசினார். இதுபற்றி பிரியங்கா காந்தி பேசியதாவது:

குடும்பத்தையே அவமானப்படுத்தினர்

குடும்பத்தையே அவமானப்படுத்தினர்

எனது தந்தையை நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்தினார்கள். என் சகோதரரை மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தனர். எனது தாயை அமைச்சர்கள் அவமானப்படுத்தி உள்ளனர். முதலமைச்சர் ஒருவர் ராகுல் காந்திக்கு தனது அப்பா யார் என்று தெரியாது என்றார். சமீபத்தில் பிரதமர் எங்கள் குடும்பத்தையே அவமானப்படுத்தி உள்ளார். எங்களின் பெயருக்கு பின்னால் நேரு என சேர்க்க வேண்டும் என்று கூறினார். அப்போது உங்கள்(பிரதமர்) மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. யாருமே அவரை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றவில்லை'' என உருக்கமாக பேசினார்.

பிரதமர் ஒரு கோழை

பிரதமர் ஒரு கோழை

மேலும் பிரியங்கா காந்தி, ‛‛பிரதமர் ஒரு கோழை. என்னை சிறையில் அடைத்தாலும் கூட நான் உண்மையை கூறுவேன். இந்த நாட்டின் பிரதமர் ஒரு கோழை. அவர் பதவி அதிகாரத்தின் பின்னணியில் ஒழிந்து கொண்டு திமிர்பிடித்தவராக இருக்கிறார். ஆனால் இந்த நாடு ஒரு பாரம்பரியத்தை கொண்டுள்ளது. அது என்னவென்றால் யாருக்கும் அடங்காத அரசனுக்கு மக்கள் உரிய முறையில் பதிலடி கொடுப்பதாகும். தற்போது மக்கள் உண்மையை அறிந்து வைத்துள்ளனர்'' என காட்டமாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+