Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதிச்சிட்டாரு.. மன்கீ பாத் உரையில் சென்னை இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏரி, குளங்களை தூய்மைப்படுத்தும் சேவையில் ஈடுபட்டு வரும் சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்திக்கு 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் இன்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்தியாவின் 400 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதி இலக்கு எட்டப்பட்டது குறித்தும் அவர் பெருமையாக கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி 2014 முதல் ‛மன் கீ பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களில் சேவையை அவர் பாராட்டுவதுன், நாட்டின் திட்டங்கள், சாதனைகள் குறித்து அவர் எடுத்து கூறி வருவதை பிரதமர் நரேந்திர மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இன்று மன்கீ பாத் நிகழ்ச்சி

இன்று மன்கீ பாத் நிகழ்ச்சி

இந்த மாதத்துக்கான நிகழ்ச்சியில்(மொத்தம் 87 வது நிகழ்ச்சி) இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 5 மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் இது அதிக கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல் பல்வேறு அம்சங்கள் குறித்து நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஏற்றுமதியில் சாதனை

ஏற்றுமதியில் சாதனை

நான் பேசுவது பொருளாதாரம் தொடர்பான விஷயமாக இருக்கலாம். ஆனால் இது பொருளாதாரம் என்பதை விட இந்திய நாட்டின் செயல்திறனுடன் தொடர்புடையதாகும். ஒரு காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 100 மில்லியனாகவும், 150 மில்லியனாகவும் மட்டுமே இருந்தது. சில சமயங்களில் 200 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால் இன்று இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான ஏற்றுமதி இலக்கை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளது.

விடா முயற்சியே வெற்றி

விடா முயற்சியே வெற்றி

ஒரு செயலுக்கான கனவை விட அதை செயல்படுத்துவது என்பது தான் மிக முக்கியமானதாக இருக்கும். தேச முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இரவு, பகல் பாராமல் நேர்மையான முயற்சியில் ஒரு செயலை செய்யும்போது அது நல்ல பலன்களை கொடுக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இதுதான் நடக்கிறது. ஒருவரின் மன உறுதியும், விடா முயற்சியும் தான் அவருடைய கனவை நனவாக்கி வெற்றியை பெற்று கொடுக்கும்.

தமிழகத்தின் வாழைப்பழங்கள்

தமிழகத்தின் வாழைப்பழங்கள்

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அசாம் மாநிலம் ஹைலகண்டியில் இருந்து தோல் பொருட்கள், உஸ்மானாபாத்தில் இருந்து கைத்தறி பொருட்கள், கர்நாடக மாநிலம் பிஜாப்பூரில் இருந்து பழங்கள், காய்கறிகள், உத்தர பிரதேசம் மாநிலம் சந்தவ்லியில் இருந்து கருப்பு அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றன. லடாக்கின் வாதுமை, தமிழகத்தின் வாழைப்பழங்களை துபாயிலும், சவுதி அரேபியாவிலும் நீங்கள் காணலாம்.

மாம்பழம், பலாப்பழம்

மாம்பழம், பலாப்பழம்


இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்டின் தினைகள் டென்மார்க்குக்கும், ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் இருந்து பைங்கனப்பள்ளி மற்றும் சுபர்ணரேகா மாம்பழங்கள் தென்கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. திரிபுராவில் இருந்து புதிய பலாப்பழங்கள் விமானம் மூலம் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, முதல் முறையாக நாகாலாந்தில் இருந்து கிங்சில்லி எனும் மிளகாய் ரகம் லண்டனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து கென்யா மற்றும் இலங்கைக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது.

 கடின உழைப்பால்...

கடின உழைப்பால்...

இந்தியாவை ஒவ்வொரு விவசாயி, கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள், பொறியாளர்கள், தொழில்முனைவோர்கள் கடின உழைப்பால் வலுப்படுத்துகின்றனர். இவர்களின் உழைப்பால் தான் 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வெளிநாடுகளுக்கு பல்வேறு வணிக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இலக்கு எட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியனும் சொந்தஊருக்காக குரல் கொடுக்கும்போது அது உலக தரத்துக்கு மாற அதிக நேரம் எடுக்காது.

ஆத்ம நிர்பர் பாரத்

ஆத்ம நிர்பர் பாரத்

GeM இணையதளம் மூலம் கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான பொருட்கள்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.25 லட்சம் சிறு தொழில்முனைவோர் நேரிடையாக அரசுக்கு தங்கள் பொருட்களை விற்பனை செய்து பங்களிப்பு செய்துள்ளனர். இப்போது சிறிய கடைக்காரர்கள் கூட ஒருவரின் பொருட்களை அரசாங்கத்திற்கு GeM இணையதளம் மூலம் விற்கலாம். இதுதான் புதிய இந்தியாவாகும். இதனால் இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து தன்னம்பிக்கையுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கான ‛ ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் கனவை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும்'' என கூறினார்.

சென்னை சேர்ந்தவருக்கு பாராட்டு

சென்னை சேர்ந்தவருக்கு பாராட்டு


இந்த நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛சென்னையை சேர்ந்த நண்பர் அருண் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது பகுதியில் உள்ள குளங்களையும், ஏரிகளையும் தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் 150க்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகளில் மாசுகளை அகற்றும் கடமைகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்'' என அவரை குறிப்பிட்டு பாராட்டுக்கள் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+