கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மோடி ட்வீட்
டெல்லி: கொரோனாவை வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள வுகான் நகரத்திலிருந்து கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு இறுதி முதல் பரவி வருகிறது. இதனால் சீனாவில் 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் அன்டார்டிகா கண்டத்தை தவிர ஏனைய அனைத்து கண்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

அதாவது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் மட்டும் 3 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.
There is no need to panic. We need to work together, take small yet important measures to ensure self-protection. pic.twitter.com/sRRPQlMdtr
— Narendra Modi (@narendramodi) March 3, 2020
இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்த நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்கள் அச்சப்பட தேவையில் என பிரதமர் மோடி ட்விட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் அச்சப்பட தேவையில்லை.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் பல்வேறு சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸைத் தடுக்க பல்வேறு அமைச்சகங்களும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன என பதிவிட்டுள்ளார்.
மேலும் அடிப்படை தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் வெளியிட்டுள்ளார். அதில்
- கைகளை அடிக்கடி நன்றாக கழுவுங்கள்.
- கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
- கண்கள், மூக்கு, வாயில் கைகளை வைப்பதை தவிருங்கள்.
- தும்மும் போதும் இருமும் போது கைக்குட்டைகளாலோ கைகளாலோ மறைத்து கொண்டு தும்மவும், இரும வேண்டும்.
- உங்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை நாடவும்.
- உங்கள் மருத்துவர் சொல்லும் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications