மன் கீ பாத் நிகழ்ச்சி.. திருப்பூரில் இளநீர் விற்கும் பெண் வியாபாரிக்கு பிரதமர் மோடி பாராட்டு
டெல்லி: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூ 1 லட்சம் நன்கொடையாக கொடுத்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள இளநீர் வியாபாரி தாயம்மாவை மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல் மன் கீ பாத் எனும் மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
இதன் முதல் நிகழ்ச்சி அக்டோபர் 3, 2014 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அப்போது தூய்மை இந்தியா திட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அது போல் கடந்த ஆண்டின் கடைசி நிகழ்ச்சி டிசம்பர் 26ஆம் தேதி நிகழ்ந்தது.

85 ஆவது நிகழ்ச்சி
அன்றைய தினம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி பேசியிருந்தார். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று காலை 11. 30 மணிக்கு தொடங்கியது. இது 85 ஆவது நிகழ்ச்சியாகும். இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

சிறப்பு ஏற்பாடுகள்
இதனால் இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக பாஜக பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று காந்தியடிகளின் நினைவு தினம் என்பதால் டெல்லியில் ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு மனதின் குரல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கினார்.

வீரமரணமடைந்தவர்கள்
அவர் தனது உரையில் இந்தியா கேட் அருகே உள்ள அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவு சுடர் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் நிறைய பேர் தனது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு வீரமரணம் அடைந்துள்ளனர். தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அமர் ஜவான் ஜோதி வீரமரணமடைந்த வீரர்களுக்கு சிறந்த மரியாதை என பல தியாகிகள் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

போர் நினைவிடங்கள்
எனவே விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் போர் நினைவிடங்களுக்கு செல்லுங்கள். பத்ம விருதுகள், பிரதமரின் பால புரஸ்கார் விருதுகளுக்குத் தேர்வான அனைவருக்கும் பாராட்டுகள். பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்கள் நாட்டின் போற்றப்படாத நாயகர்கள். 1 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் அவர்கள் நடத்திய மன் கீ பாத் நிகழ்ச்சியை எனக்கு போஸ்கார்டில் அனுப்பினர்.

திருப்பூர் தாயம்மாள்
இந்தியாவின் பல்வேறு நாடுகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் இந்த போஸ்ட் கார்டுகள் வந்துள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இளநீர் வியாபாரம் செய்யும் தாயம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். வறுமையில் வாடும் நிலையிலும் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூ 1 லட்சம் நன்கொடை அளித்தார். இதை செய்ய அவருக்கு மிகப் பெரிய மனம் வேண்டும்.

தடுப்பூசி மீது நம்பிக்கை
இந்தியாவில் கொரோனா 3ஆவது அலையை வெற்றிக் கரமாக எதிர்த்து வருகிறோம். 15 முதல் 18 வயதுக்குள்பட்டவர்களில் 4.5 கோடி குழந்தைகள் தடுப்பூசி எடுத்துக் கொண்டது பெருமையாக இருக்கிறது. கொரோனா தடுப்பூசியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மிகப் பெரிய பலமாக விளங்குகிறது. கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. இது நல்ல அறிகுறியாகும் என்றார் பிரதமர் மோடி
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications