மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..? வடகிழக்கு மாநில முதல்வர்களுடன்.. பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை
டெல்லி: கொரோனா பரவல் தொடர்பாக வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாட்டில் கொரோனா 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் நான்கு லட்சம் வரைகூட சென்ற வைரஸ் பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 37,154 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், நாட்டில் கொரோனா 2ஆம் அலை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை என்றும் சில மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு இன்னும் அதிகமாகவே உள்ளதாக ஆய்வாளர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். வீடியோ கான்பரன்சிங் முறையில் நாளை காலை 11 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகிய எட்டு மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மணிப்பூர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் பல மாவட்டங்களின் பாசிட்டிவ் விகிதம் இன்னும்கூட அதிகமாகவே உள்ளது. கடந்த வாரம், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலையை ஆய்வு செய்திருந்தார்.
மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்புக் குழுக்களையும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications