"யாரும் தப்ப முடியாது! அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்" டெல்லி கார் வெடிப்பு! பிரதமர் மோடி திட்டவட்டம்
டெல்லி: செங்கோட்டை அருகே கார் விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாகப் பிரதமர் மோடி சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். இந்த கார் விபத்தில் உயிரிழந்தோருடன் ஒட்டுமொத்த நாடும் உடன் நிற்கும் என்ற அவர், இந்த வெடிப்பிற்குக் காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்றைய தினம் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் நடந்த இந்த வெடிப்புச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இந்த கார் வெடிப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். பூட்டான் நாட்டிற்கு அரசு முறை பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது கார் வெடிப்பு குறித்துப் பேசினார்.
டெல்லி கார் வெடிப்புக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்ற பிரதமர் மோடி, குற்றவாளிகள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் ஒட்டுமொத்தத் தேசமும் பாதிக்கப்பட்டவர்களுடன் துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நேற்றிரவு முழுக்க இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் அனைத்து ஏஜென்சிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் இந்தச் சதித்திட்டத்தின் ஆழம் வரை சென்று விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications