அதானி, அம்பானிக்கு பதில் A1, A2.. ’நெருப்புடா’ ரேஞ்சில் லோக்சபாவில் அனலாய் தெறித்த ராகுல் காந்தி!
டெல்லி: லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தொழிலதிபர்கள் அதானி, அம்பானி பெயரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டார். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து "பிரதமர் நரேந்திர மோடி- A1, A2 ஆகியோரை பாதுகாக்கிறார்.. நாம் இதனை புரிந்து கொள்ளலாம்" கிண்டலாக அம்பானி, அதானி பெயரை குறிப்பிட பாஜக எம்பிக்கள் கொந்தளித்து போயினர்.
லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பேசினார். ராகுல் காந்தி பேசத் தொடங்கியது முதலே ஆவேசத்தை வெளிப்படுத்தினார். இன்னொரு பக்கம் ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இடைவிடாமல் அமளியில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவும் தலையீடு செய்தார். இதற்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராகுல் காந்தி லோக்சபாவின் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டார். பட்ஜெட் தயாரிப்பு திட்டமிட்டலுக்கான அல்வா நிகழ்ச்சியில் கூட பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடம் பெறவில்லை. இந்த பட்ஜெட்டிலும் நாட்டில் 93% மக்களுக்கு எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஆனால் விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்ற்ஐ அம்பானி, அதானிகளிடம் ஒப்படைத்துவிட்டீர்கள். கொரோனா காலத்தில் தட்டு தட்டுவது, செல்போன் டார்ச்சை அடிக்கச் சொன்னதுதான் நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்பா?
இங்கே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமர்ந்துள்ளார். இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என எதை அறிவித்துள்ளீர்கள்? நீங்கள் அறிவித்துள்ள திட்டமானது பெருமுதலாளிகளுக்கு மட்டுமே உரியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும் அதுபற்றி பேசவே இல்லை இந்த பட்ஜெட் என்றார்.
அத்துடன், பாஜகவினரே நீங்கள் அச்சப்பட வேண்டாம்; பதற்றப்பட வேண்டாம்.. நான் என்னுடைய உரையை விரைவாகவே முடித்து விடுகிறேன் என கேலியும் கிண்டலுமாக சாடினார் ராகுல் காந்தி.
முன்னதாக இந்த நாட்டில் 6 பேர் சக்கர வியூகம் அமைத்துள்ளனர் அம்பானி, அதானியையும் குறிப்பிட்டு ராகுல் காந்தி விமர்சித்தார். ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா அஜித் தோவல், அம்பானி, அதானி பெயர்களை சபைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார். அப்போது மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூவும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி A1, A2 ஆகியோரை பாதுகாக்கிறார்.. இதனை நாம் புரிந்து கொள்வோம் என அம்பானி- அதானி பெயர்களை கிண்டலாகக் குறிப்பிட்டார். இதற்கும் பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரித்து அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தரப்பில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குகிறார் என குற்றம்சாட்டப்பட்டது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications