”2ம் முறையாக பிரதமர் மன்னிப்பு கேட்பார்” விளாசும் ராகுல் காந்தி.. விமர்சிக்கும் பிரியங்கா..!
டெல்லி:
Recommended Video
ராணுவத்தில் இளைஞர்களை தேர்வு செய்வதற்காக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தில் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்ற அழைக்கப்பட உள்ளனர். வெறும் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மற்றவர்கள் ஒய்வூதியம் இன்றி வெளியேறும் வகையில் அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இது பல்வேறு தரப்பினர் மத்தில் விமர்சனங்களை பெற்றது.
இதனைக் கண்டித்து 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இளைஞர்கள் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் போராட்டம் காரணமாக பீஹார், உத்தரப் பிரதேசம், ஹரியானா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 300க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு இடஒதுக்கீடு, வயது வரம்பில் மாற்றம் உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. இருந்தும் இளைஞர்களின் போராட்டம் அடங்கவில்லை.
இந்தநிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பேசியுள்ளார். அதில், விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் என்று முன்பே கூறியிருந்தேன். அதேபோல் மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. தற்போது இளைஞர்களுக்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் நிலை உருவாகும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர்களிடம் இரண்டாவது முறையாக மன்னிப்பு கேட்பார் என்று விமர்சித்துள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்களை அனுபவித்து வரும் வலியையும், பிரச்னைகளையும், விரக்தியையும் மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை. அதற்கு மாறாக இளைஞர்களுக்கு உதவுகிறேன் என்ற பெயரில், மத்திய அரசு வேலை மீதான நம்பிக்கை, பதவிகள், பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை பறிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications