தமிழக புதுமணத் தம்பதிக்கு பிரதமர் மோடி வாழ்த்துமடல்...!
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த புதுமணத் தம்பதிகளுக்கு, பிரதமர் மோடி தனது கையெழுத்துடன் கூடிய திருமண வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்தவர் ராஜசேகரன். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் பிரதமர் மோடியின் தீவிர அபிமானி ஆவார். கடந்த மாதம் தனது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் அடித்த ராஜசேகரன் அதனை மோடிக்கு அனுப்பி வைத்தார். மேலும் மணமக்களை தாங்கள் நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.

ராஜசேகரன் கடிதம் அனுப்பி ஒரு மாதம் ஆகிய நிலையில் சனிக்கிழமை அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளார் பிரதமர் மோடி. ராஜசேகரனுக்கு பதில் கடிதம் அனுப்பிய மோடி, அதில் மணமக்களுக்கு வாழ்த்துச் செய்தி கூறியிருந்தார். தங்கள் மகள் திருமணத்திற்காக அழைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் வளமுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்திப்பதாக கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் வாழ்த்துக்கடிதம் வரும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், அவர் அனுப்பி வைத்த வாழ்த்துமடல் எங்கள் இரு குடும்பத்தாரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துவிட்டதாகவும் கூறியுள்ளனர் மணமக்கள் வீட்டினர்.

திருமணத்திற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் பிரதமர் அனுப்பிய கடிதத்தை உற்றார், உறவினர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பெரிய பதாகையாக மாற்றும் பணியில் இறங்கியிருக்கிறார் ராஜசேகரன்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications