Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நல்லாட்சி வென்றது”.. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி சொன்ன சேதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், நல்லாட்சி வென்றது எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

தலைநகர் டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தற்போதைய நிலவரப்படி 41 தொகுதிகளில் வெற்றி, 7 தொகுதிகளில் முன்னிலை என பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 21 தொகுதிகளில் வெற்றி, 1 தொகுதியில் முன்னிலை என 22 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.

delhi election 2025 delhi election result 2025 arvind kejriwal 2025 2025

புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஷீலா திட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சித் ஆகியோர் களம் இறங்கினர். இந்த தொகுதியில் பாஜக, வேட்பாளர் பர்வேஷ் வர்மா 30,088 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கெஜ்ரிவால் 25,999 ஓட்டுக்கள் பெற்று, 4,089 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ஜங்புரா தொகுதியில், ஆம் ஆத்மி சார்பில், மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிட்டார். பாஜக சார்பில் கர்தார் சிங் தன்வார் போட்டியிட்டார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் கர்தார் சிங் தன்வார் 38,859 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். மணீஷ் சிசோடியா 38,184 ஓட்டுக்கள் பெற்று, 675 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

கடந்த 2013, 2015, 2020ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் புதுடெல்லி தொகுதியில் 3 முறை களமிறங்கி வெற்றி பெற்று கெஜ்ரிவால் முதல்வரானார். இந்நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்து இருப்பது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைய உள்ளது. பாஜக வெற்றியை உறுதி செய்து விட்ட நிலையில், பாஜக ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை முன்னிட்டு தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், "மனித சக்தி மகத்தான சகதி! வளர்ச்சிப்பணி வென்றது, நல்லாட்சி வென்றது. இது பாஜகவின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி. பாஜகவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அளித்த எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வணக்கமும் வாழ்த்துக்களும். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியின் வளர்ச்சியிலும், மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லிக்கு முக்கிய பங்கு இருப்பதை உறுதி செய்வதில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

இந்த மகத்தான வெற்றிக்கு இரவும், பகலும் உழைத்த எனது அனைத்து பாஜக தொண்டர்களையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்போது டெல்லி மக்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் இன்னும் உறுதியாக, அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்" என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+