இஸ்ரேலிலிருந்து திடீரென வந்த போன் கால்.. பிரதமர் மோடிக்கு வாக்கு கொடுத்த நெதன்யாகு!
டெல்லி: சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து உரையாடியிருக்கிறார். மோடியை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் நெதன்யாகு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் விவகாரத்தில் சமீப காலமாக இந்தியா தொடர்ந்து நெருக்கமாக இருந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. "பாலஸ்தீன விஷயத்தில் இஸ்ரேலின் நடவடிக்கை சரி கிடையாது. சர்வதேச போர் விதிகளை மீறி ஆயிரக்கணக்கானவர்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது. தனி பாலஸ்தீனம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வந்தது. ஆனால், இப்போது பாலஸ்தீனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருக்கிறது" என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில்தான் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருக்கிறார். இந்த தொலைபேசி உரையாடல் குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "பிரதமர் நரேந்திர மோடிக்கு, இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்தியா-இஸ்ரேல் ராஜதந்திர உறவு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர், மேலும் இரு நாட்டு நன்மைக்காக இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் உறுதி ஏற்று இருக்கின்றனர்.
பயங்கரவாதத்தை இரு தலைவர்களும் கடுமையாகக் கண்டித்தனர். மேலும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகள் மீதான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை மீண்டும் வலியுறுத்தினர். மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். காசா அமைதித் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது உட்பட, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நோக்கிய முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, இரு தலைவர்களும் மிக விரைவில் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இஸ்ரேல் அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்தியா வருவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. இருப்பினும் செப்.8ம் தேதி அவர் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications