ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் பறந்த நபர்.. துரத்தி பிடித்த காவல்துறை! அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் சாலை விபத்தில் 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 426 பேர் உயிரிழப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், காவல்துறை அதிகாரி ஒருவர், சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருக்கும் நபரை நிறுத்தி அவருக்கு ஹெல்மெட் போட்டு விடுகிறார்.
உரிய பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்வது விபத்துக்களை குறைக்கும் என ஆய்வுகள் பல தெரிவித்துள்ள நிலையில், காவல்துறை அதிகாரியின் இந்த செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

விபத்துக்கள்
இந்தியாவில் கடந்த 2021ல் 4.03 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துக்களில் 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 426 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்பு ஒரு மணி நேரத்திற்கு 18ஆக இருக்கிறது. இவ்வாறு ஏற்பட்ட விபத்துகளில் 3.71 லட்சம் பேர் படுகாயமடைந்துள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்திருக்கிறது. விபத்துக்கு அதிவேகமும், பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றாததும்தான் முக்கிய காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஹெல்மெட்
இந்நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவர், பைக்கில் சென்றுகொண்டிருந்த ஒவரை தடுத்து நிறுத்தி அவருக்கு ஹெல்மெட்டை அணிவித்துள்ளார். ஜெய்க்கி யாதவ் எனும் டிவிட்டர் பயனாளி பகிர்ந்த வீடியோவில் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் காவல்துறை அதிகாரி ஹெல்மெட்டை அணிவித்தது மட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகள் குறித்தும், ஹெல்மெட்டுடன் பயணிக்க வேண்டிய அவசியம் குறித்தும் அந்த பயணிக்கு கைகூப்பி எடுத்துரைத்துள்ளார்.

வேண்டுகோள்
மேலும், அடுத்த முறை ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் ஐந்து மடங்காக விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. காவல்துறையின் அணுகுமுறையை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இந்த சம்பவம் நடந்த இடம் எந்த மாநிலம் என்று சரியாக தெரியவில்லை. இருப்பினும் ஒவ்வொரு காவலர்களும் இதுபோன்ற அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என இந்த வீடியோவுக்கு பயனர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான மாநிலங்கள்
இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்துள்ளன. NCRB புள்ளிவிவரங்களின்படி, 2020 (0.45), 2019 (0.52), 2021 (0.53) என உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று இருந்த போதுகூட இந்த விபத்து உயிரிழப்புகள் கணிசமாக குறைந்தபாடில்லை. பொதுவாக சாலை விபத்துக்கள் காயங்களை மட்டுமே ஏற்படுத்துகின்றன. ஆனால் மிசோரம், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்படும் விபத்துக்கள் மரணங்களை ஏற்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications