பாஜக பிரமுகர் அமித் மால்வியா குறித்து தவறான செய்தி? ’தி வயர்’ ஆசிரியர்கள் வீடுகளில் அதிரடி சோதனை!
டெல்லி : பாஜக ஐடி விங் பொறுப்பாளர் அமித் மால்வியா குறித்து தவறான செய்தி வெளியிட்டதாக அவர் புகார் அளித்த நிலையில் இணையதள ஆசிரியர்கள் சித்தார்த் வரதராஜன் எம்கே வேணு ஆகியோரது இல்லங்களில் சோதனை நடத்திய போலீசார் செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பாஜக பிரமுகரும், அக்கட்சியின் ஐடி விங் பொறுப்பாளருமான அமித் மால்வியா தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தி வயர் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்ததாக புகார் அளித்திருந்தார்.
அதாவது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாக தி வயர் இணையதளத்தின் ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன் எம்கே வேணு ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார்.

தி வயர் செய்தி
அதாவது தி வயர் இணையதளத்தில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 'எக்ஸ் செக் லிஸ்ட்' மற்றும் 'கிராஸ் செக்' என 'டெக் ஃபாக்' என்ற செயலி மூலம் அமித் மால்வியாவுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டதாக அக்டோபர் மாதத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த சூப்பர் ஹூயுமன் ஆப்பை பயன்படுத்தி பேஸ்புக் மற்றும் அது சார்ந்த தளங்களில் பாஜகவுக்கு எதிரான செய்திகளை அமித் மால்வியா தனது குழுவின் மூலம் நீக்கியதாக கூறப்பட்டிருந்தது.

அமித் மால்வியா
மேலும் பேஸ்புக்கில் பாஜகவுக்கு எதிரான நூற்றுக்கணக்கான பதிவுகளையும் அவர் நீக்கியதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனால் தி வயர் மீது அமித் மால்வியா கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதே நேரத்தில் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த செய்தி வெளியானது எனவும் அதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தி வயர் கூறி இருந்தது.

போலீசில் புகார்
ஆனால் தி வயர் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை மெட்டா செய்தி தொடர்புத் துறை தலைவர் ஆன்டி ஸ்டோன் மறுத்திருந்தார். இதனிடையே தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் பொய் செய்தி வெளியிட்டதாக அமித் மால்வியா தி வயர் மீது குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் போலீசிலும் புகார் அளித்திருந்தார். தொடர் அழுத்தங்களால் தங்கள் செய்திக்கு தி வயர் மன்னிப்பு கேட்ட நிலையில் தங்கள் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடந்துள்ளது என விளக்கம் அளித்தது.

அதிரடி சோதனை
இந்த நிலையில் அமித் மால்வியா அளித்த புகாரின் பேரில் தி வயர் இணையதள ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், எம்கே வேணு ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்திய டெல்லி போலீசார் போன்கள் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியரான தேவேஷ்குமார் என்பவர் மீதும் நிறுவனம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications