3-வது முறையாக விவசாயிகளின் 'டெல்லி சலோ' போராட்டம்.. ஹரியானா எல்லையில் மீண்டும் கண்ணீர் புகை வீச்சு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீசாரின் தடையை மீறி முன்னேற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் ஹரியானாவின் பல பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் செல்ல முடியாத வகையில் அம்மாநில போலீசாரும் பாதுகாப்பு படையினரும் தடுப்பு அரண்களை அமைத்துள்ளனர்.

farmers protest

இந்த நிலையில் டிசம்பர் 6, டிசம்பர் 8 ஆகிய தேதிகளில் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் இருந்து விவசாயிகள், டெல்லி நோக்கி புறப்பட்டு போராட்டம் நடத்த முயற்சித்தனர். ஆனால் ஹரியானா மாநில போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். அப்போது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் விவசாயிகளை முன்னேற விடாமல் போலீஸ் தரப்பு தடுத்தது. இதனால் இரு முறை போராட்டங்களை தற்காலிகமாக விவசாயிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று 3-வது முறையாக ஹரியானாவின் ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி செல்ல விவசாயிகள் முயன்றனர். இன்றும் போலீசாரும் பாதுகாப்பு தரப்பினரும் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்; இந்த தடையை மீறி முன்னேற முயன்ற போது விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

இதனிடையே ஹரியானா மாநிலத்தின் பல பகுதிகளில் மொபைல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது; அதேபோல பல்க் எஸ்.எம்.எஸ். வசதியும் தடை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையாமல் தடுக்க இந்த நடவடிக்கைகளை ஹரியானா மாநில அரசு மேற்கொண்டுள்ளது. ஹரியானாவில் அடுத்த 3 நாட்களுக்கு இந்த இணைய சேவை தடை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+