விமான பணிப்பெண் வீட்டுக்கு சென்ற அரசியல்வாதி.. மதுபோதையில் பாலியல் சீண்டலால் கைது.. பரபரப்பு
டெல்லி: டெல்லியில் விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக உள்ளூர் அரசியல்வாதி ஹர்ஜித் யாதவை போலீஸார் கைது செய்தனர்.
டெல்லியில் மெஹ்ருலி பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவர் தனியார் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ஹர்ஜித் யாதவ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர் உள்ளூர் அரசியல்வாதியாவார். இவர் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு மதுபோதையில் வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது அவரிடம் என்னவென விசாரித்து கொண்டிருந்தார் அந்த விமான பணிப்பெண்.

மதுபோதை
மதுபோதையில் நிதானம் இல்லாமல் இருந்த அந்த அரசியல்வாதி திடீரென அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். அந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்களை கொடுத்துள்ளார். அந்த பெண் இதெல்லாம் தவறு , என்னிடம் இது போல் நடந்து கொள்வது எனக்கு பிடிக்கவில்லை என கூறி பார்த்தார்.

சாதாரணமாக பழகுதல்
நான் சாதாரணமாக பழகியதற்கு இப்படி ஒரு மோசமான செயலை என்னிடம் செய்யாதே என வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் ஹர்ஜித்தோ அதையெல்லாம் காதில் வாங்காமல் மிகவும் மோசமாக பாலியல் வக்கிரங்களை அரங்கேற்ற முயற்சித்தார். இதனால் அச்சம் அடைந்த அந்த பெண், போதையில் இருந்த ஹர்ஜித்தை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்துள்ளார்.

இளம்பெண்
இதையடுத்து போலீஸாருக்கு அந்த இளம்பெண் போன் செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போதும் ஹர்ஜித்துக்கு போதை தெளியாமல் இருந்தது. அந்த பெண்ணிடம் புகாரை வாங்கிக் கொண்டனர்.

ஹர்ஜித்திற்கு போதை தெளிந்தவுடன் விசாரணை
மேலும் ஹர்ஜித்திற்கு போதை தெளிந்தவுடன் விசாரணை நடத்த அவரை காவல் நிலையத்திலேயே வைத்திருந்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை சிறையில் அடைத்துள்ளனர். அவர் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமூகவலைதளங்களில்தான் பழக்கம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதியாக அறியப்பட்ட ஒருவர் மதுபோதையில் ஒரு மாதமே பழகிய பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications