பஞ்சாப்பில் யார் ஆட்சி? அனைத்து எக்ஸிட் போல் சர்வேக்களும் சொல்வது இந்த "ஒன்றை தான்.." பரபர களம்!
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்து சட்டசபைத் தேர்தல் குறித்து வெளியான அனைத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும் ஒரே விஷயம் தான் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப். 20ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. பஞ்சாபில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ள நிலையில், 71.95% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஒரே டிரெண்டை தான் காட்டுகிறது.

இந்தியா டுடே
இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் வெறும் 19-31 இடங்களில் மட்டுமே வெல்லும் என இந்தியா டுடே சர்வேவில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மிக 76 முதல் 90 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. இரு கட்சிகளைத் தொடர்ந்து அகாலி தளம் 7-11 இடங்களில் வெல்லும் என்றும் பாஜக 01-04 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் இரு இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஏபிபி- சிவோட்டர்
ஏபிபி- சிவோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் மொத்தம் 117 இடங்களில் ஆம் ஆத்மி 51 முதல் 61 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்து தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி வெறும் 22 முதல் 28 இடங்களை மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அகாலி தளம் 20 முதல் 26 இடங்களில் வெல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாஜக கூட்டணி 7 முதல் 13 இடங்களிலும் இதர கட்சிகளும் சுயேச்சைகளும் 1 முதல் 5 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 70 வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் வெறும் 22 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அகாலி தளம் கட்சி மொத்தம் இருக்கும் 117 இடங்களில் 19 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 5 இடங்களிலும் இதர மற்றும் சுயேச்சைகள் ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ்
ஜீ நியூஸ் கருத்துக் கணிப்பிலும் ஆம் ஆத்மி 52-61 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 26-33 இடங்களிலும், அகாலி தளம் 24-32 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக அமரிந்தர் சிங் கூட்டணி 3-5 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது. வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி 39% வாக்குகளைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 25% வாக்குகளையும் அகாலி தளம் 24% வாக்குகளையும் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ்
நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் நிறுவனத்தின் படி ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 56-61 இடங்களைப் பெறும்.காங்கிரஸ் கட்சி 24 முதல் 29 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்படும். அகாலி தளம் கட்சி 22 முதல் 26 வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. பாஜக கூட்டணி 1-6 இடங்கள் வரையே பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கட்சிகள் 3 இடங்களை வரை பெற வாய்ப்புள்ளது.

ரிபப்பளிக்
ரிபப்பளிக் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 62-70 இடங்களில் வென்று ஆட்சியை அமைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து காங்கிரஸ் 23-31 இடங்களிலும், அகாலி தளம் 16-24 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜக கூட்டணி 1-3 இடங்களிலும் இதர கட்சிகள் 1 முதல் 3 இடங்கள் வரை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

டுடேஸ் சாணக்யா
டுடேஸ் சாணக்யா நடத்திய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்புகளில் ஆம் ஆத்மி 100 அல்லது 111 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அது போல் காங்கிரஸ் கட்சி 10 அல்லது 17 இடங்களிலும் வெல்லும். அகாலி தளம் கட்சி 6 அல்லது 11 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி ஒரு இடத்தில் வெல்லும் அல்லது ஒரு இடத்திலும் வெல்லாமல் போகும் எனக் கணித்துள்ளது.

ஆட்சி மாற்றம் நிச்சயம்
பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை கிட்டதட்ட அனைத்து செய்தி நிறுவனங்களும் ஒரே மாதிரியான டிரெண்ட்டை கணித்துள்ளன. போஸ்ட்போல்களை பொருத்தவரை இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைப்பது மிக மிகக் கடினம். அதேநேரம் அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஆம் ஆத்மி வெல்லும் அல்லது தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றே தெரிவித்துள்ளன. தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.












Click it and Unblock the Notifications