காங். கையைவிட்டு போகும் பஞ்சாப்?கடும் போட்டி தரும் ஆம் ஆத்மி.. அத்தனை சர்வேக்களும் சொல்வது இதைத்தான்
டெல்லி: பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது
Recommended Video
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல்கள் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.
எனவே, பஞ்சாபில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. அங்கு வரும் பிப். 20இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பஞ்சாப் சூழல்
எனவே, அங்கு எப்படியாவது மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இதைத் தாண்டி முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரசுடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது. அதேபோல அகாலி தளம் மற்றும் பகுஜன் சமாஜ் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்கிறது.

காங்கிரஸ்
இதில் பஞ்சாபில் நடைபெற்ற நிகழ்வுகள் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக அமையவில்லை அங்கு முதலில் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்கிற்கும் பஞ்சாப் காங். கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் உச்சமடையவே, அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி கொண்டு வரப்பட்டார். பஞ்சாபில் சுமார் 30% தலித்துகள் உள்ளதால் அதே சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்க 50-50 மட்டுமே வாய்ப்புள்ளதாகத் தேர்தல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்

ஆம் ஆத்மி
மறுபுறம் ஆம் ஆத்மிக்கு அங்கு நல்ல ஒரு வரவேற்பே கிடைத்து வருகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் கூட ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அங்குத் தேர்தல் பிரசாரத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட தேர்தலில் வென்றால் மகளிருக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என அவர் அறிவித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது.

தேர்தல்
மொத்தமுள்ள 117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபையில் பெரும்பான்மைக்குக் குறைந்தபட்சம் 59 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி கட்சியால் வெறும் 20 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஒரு கட்டத்தில் ஆளும் கட்சியாக இருந்த அகாலி தளம் 15 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜகவுக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

கருத்துக்கணிப்புகள்
இந்நிலையில், பஞ்சாப் தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், பல்வேறு செய்தி நிறுவனங்களும் இது தொடர்பான மக்கள் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன. அதன் விவரம்
- ஏபிபி - சி வோட்டர்ஸ்: காங்கிரஸ் 37-43, ஆம் ஆத்மி 52-58, அகாலி தளம் 17-23, பாஜக 1-3
- இந்தியா அஹெட்- இடிஜி: காங்கிரஸ் 40-44, ஆம் ஆத்மி 59-64, அகாலி தளம் 8-11, பாஜக 1-2
- ரிபப்பிளிக் - பி மார்க்: காங்கிரஸ் 42-48, ஆம் ஆத்மி 50-56, அகாலி தளம் 13-17, பாஜக 1-3
- நியூஸ் எக்ஸ் - POLSTRAT: காங்கிரஸ் 40-45, ஆம் ஆத்மி 47-52, அகாலி தளம் 22-26, பாஜக 1-2
- டைம்ஸ் நவ் - வெட்டோ: காங்கிரஸ் 41-47, ஆம் ஆத்மி 54-58, அகாலி தளம் 11-15, பாஜக 1-3
- இந்தியா நியூஸ் -ஜன் கி பாத்: காங்கிரஸ் 32-42, ஆம் ஆத்மி 58-65, அகாலி தளம் 15-18, பாஜக 1-2
- ஜி - DESIGNBOXED: காங்கிரஸ் 35-38, ஆம் ஆத்மி 36-39, அகாலி தளம் 32-35, பாஜக 4-7

யாருக்கு பெரும்பான்மை
இதில் இந்தியா அஹெட், டைம்ஸ் நவ், இந்தியா நியூஸ் ஆகிய செ்தி நிறுவனங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஏபிபி, ரிப்பபிளிக், நியூஸ் எக்ஸ், ஜி செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் இருப்பினும் ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது சராசரியாகக் காங்கிரஸ் 38-44 இடங்களிலும், ஆம் ஆத்மி 51-57 இடங்களிலும் அகாலி தளம் 117-21 இடங்களிலும் அமரீந்தர் சிங்- பாஜக கூட்டணி 1-3 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

பாஜக - அகாலி தளம்
கடந்த தேர்தலில் கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்திருந்தார். ஆனால், இப்போது காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜக உடன் இணைந்து போட்டியிடுகிறார். கடந்த ஓராண்டாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதால் இந்தக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைப்பது கடினம் தான். ஒரு கட்டத்தில் ஆளும் கட்சியாக இருந்த அகாலி தளம் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது. கவுரமான இடங்களைப் பெறவே அக்கட்சி போராடும்.

கடும் போட்டி
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித சிங் மற்றும் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் மான் இருவரும் பஞ்சாபில் உள்ள மால்வா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த பகுதி பஞ்சாபிற்கு சரண்ஜித் சன்னி, கேப்டன் அமரீந்தர் சிங், அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட 5 முதல்வர்களை அளித்துள்ளது. கருத்துக்கணிப்புகளில் ஆம்ஆத்மி தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் கூட இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications