Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காற்று மாசு குறையும் என நாளை வரை காத்திருக்க முடியாது! டெல்லி அரசை சாடிய உச்சநீதிமன்றம்-பரபர உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதோடு டெல்லியில் காற்று மாசு நாளை குறையும் என நாம் காத்திருக்க முடியாது என டெல்லி அரசை கடுமையாக சாடியது.

டெல்லியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காற்று மாசுபாடு என்பது அதிகரித்து வருகிறது. டெல்லியின் காற்று தரக்குறியீடு என்பது 400க்கும் அதிகமாகி உள்ளது. இதனால் மக்கள் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.

Pollution level should be come down it cannot await tomorrow, Supreme Court slams Delhi government

டெல்லியில் திடீரென அதிகரித்த காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாப்பில் பயிர் கழிவுகளை எரிப்பது தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே தான் டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தி மக்களை காக்க வேண்டும் என பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் டெல்லியில் பெய்த மழையின் காரணமாக தற்போது காற்று மாசுபாடு என்பது சற்று குறைய தொடங்கி உள்ளது.

மேலும் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக ஒற்றைபடை-இரட்டை படை வாகன திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் இன்று டெல்லியில் ஒற்றைபடை-இரட்டை படை வாகன திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்த வேளையில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஒற்றைப்படி-இரட்டை படை வாகன இயக்கத்தை செயல்படுத்துவோம் என டெல்லி அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதற்கு உச்சநீதிமன்றம், இதனை செயல்படுத்தாமல் விட்டுவிட முயற்சிக்காதீர்கள். இது நடந்தால் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடலாம் என காட்டமாக தெரிவித்தது.

மேலும் உச்சநீதிமன்றம் கூறுகையில், ‛‛டெல்லியில் பெய்த மழையால் காற்று மாசுபாடு என்பது சற்று குறைந்துள்ளது. மக்களின் கடவுள் பிரார்த்தனையை தொடர்ந்து மழை வந்திருக்கலாம். இதன்மூலம் அரசுக்கு நன்றி தெரிவிக்க முடியாது. டெல்லி காற்று மாசுபாடு பிரச்சனை என்பது மிகவும் மோசமானது. இதனால் காற்று மாசுபாட்டை தடுத்து அதன் தரத்தை உயர்த்த அவசர நடவடிக்கை வேண்டும்'' என உத்தரவிட்டது.

இதுதவிர, ‛‛காற்று மாசுபாட்டை எப்படி வேண்டுமானாலும் குறையுங்கள் என கூறியுள்ளோம். ஆனால் அதற்கு முன்பாக பயிர் கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் டெல்லியில் காற்று மாசுபாடு நாளை குறையும் என்று நாம் காத்திருக்க முடியாது''என சாடியது.

மேலும் காற்று மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்பதை தான் நாங்கள் விரும்புகிறோம். அதனை எப்படி செய்வது என்பதை நீங்கள் (டெல்லி அரசு) தான் முடிவு எடுக்க வேண்டும். அதோடு விவசாயிகள் என்பவர்கள் இந்த சமூகத்தில் மிகவும் முக்கியமான ஒரு பகுதியாக உள்ளனர். அவர்களும் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும்'' என தெரிவித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+