AR Rahman: ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்துங்க.. பொன்னியின் செல்வன் II பாடல் ‛காப்பி' வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛பொன்னியின் செல்வன் - II' திரைப்படத்தில் இடம்பெற்ற ‛வீர ராஜா வீர' பாடலை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் காப்பியடித்ததாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏஆர் ரஹ்மான் (AR Rahman) ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று இன்று அதிரடியாக உத்தரவிட்டது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் தேதி ‛பொன்னியின் செல்வன் - II' திரைப்படம்வெளியானது. இந்ததிரைப்படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.இந்த திரைப்படத்தில் ‛வீர ராஜா வீர' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடல் காப்பியடிக்கப்பட்டதாக பத்மஸ்ரீ விருது பெற்ற துருபத் இசைக்கலைஞர் பையாஸ் வாசிபுதீன் தாகர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‛‛தனது தந்தை நீசர் பயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோர் உருவாக்கிய ‛சிவ ஸ்துதி' பாடல் மெட்டில் ‛வீர ராஜா வீர' பாடல் இடம்பெற்றுள்ளது'' என்று கூறியிருந்தார்.

ponniyin-selvan-ii-supreme-court-orders-to-pay-rs-2-crore-for-veera-raja-veera-song-copy-from-dagar

மேல்முறையீடு

அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு 2025 ஏப்ரல் 25ல் ஏஆர் ரஹ்மான் அந்த பாடலுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். ரூ.2 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஏஆர் ரஹ்மான் உச்சநீதிமன்றத்தில் டிவிஷன்பெஞ்ச்சில் மேல்முறையீடு செய்தார். அங்கு ரூ.2 கோடி டெபாசிட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. இருப்பினும் பாடலின் ஒரிஜினாலட்டி மீறல் தொடர்பாக வழக்கின் இறுதியில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியது.

உச்சநீதிமன்றம் விசாரணை

இருப்பினும் கூட டெல்லி உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இசைக்கலைஞர் பையாஸ் வாசிபுதீன் தாகர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஏஆர் ரஹ்மான் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் மான்வி சிங்வி வாதாடினார். அப்போது அவர், ‛‛இந்த பாடல் 1991ல் பலரால் பாடப்பட்டுள்ளது. அப்போது ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இப்போது மட்டும் ஆட்சேபனை தெரிவிக்கிறார்'' என்று வாதிட்டார்.

ரூ.2 கோடி செலுத்த உத்தரவு

பையாஸ் வாசுபுதீன் தாகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛நாங்கள் மெட்டுக்கு உரிமை கோரவில்லை. எனது தந்தை உருவாக்கிய குறிப்பிட்ட இசைக்கு மட்டுமே உரிமை கோருகிறோம்'' என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் இசையில் முந்தைய ‛தாகர்வாணி' பாரம்பரியத்தின் பங்களிப்பை ஏஆர் ரஹ்மான் அங்கீகரிக்க வேண்டும். இது சக கலைஞர்களுக்கு இடையேயான சண்டை இல்லை. தொழில்முறை இசைக்கலைஞர்களான மரியாதையும் அங்கீகாரமும் மட்டுமே தேவை. இந்த மாதிரியான இசை குடும்பங்கள் பங்களிக்கவில்லை என்றால் இன்றைய நவீன பாடகர்கள் இவ்வளவு தூரம் சாதித்து இருக்க முடியுமா?

பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மேலும் இந்த பாடல் சிவா ஸ்துதியில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை ஏஆர் ரஹ்மான் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதோடு வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது. நீதிமன்றத்தின் இன்றைய கருத்து தொடர்பாக அன்றைய தினம் ஏஆர் ரஹ்மான் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+