ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்- காஷ்மீர், டெல்லி.. அதிர்ந்தன வட இந்திய மாநிலங்கள்!
டெல்லி: ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.8 அலகுகளாக பதிவாகி இருந்தது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நாட்டின் வட மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்டவையும் நில அதிர்வுகளை எதிர்கொண்டன.
ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் இன்று பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 5.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தன. இந்திய நேரப்படி பகல் 12.17 மணிக்கு இந்த நிலநடுக்கம் தாக்கியது. பூமிக்கு அடியில் 80 கீமீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் மிதமான நில அதிர்வுகள் உணரப்பட்டது. இதேபோல டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். தற்போது நில அதிர்வுகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
முன்னதாக கடந்த புதன்கிழமையன்றும் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியை மையாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டரில் 5.9 அலகுகளாகப் பதிவானது. டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்கள் அப்போது நில அதிர்வை உணர்ந்தன.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications