டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் லாக்டவுன் பயனுள்ளதாக வேண்டுமா?.. இதையெல்லாம் ஃபாலோ செய்ங்க!.. பிரதீப் கவுர் அட்வைஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: சென்னையில் இன்று முதல் அமலாகும் முழு லாக்டவுன் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றால் இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் துணை தலைவர் பிரதீப் கவுர் பட்டியலிட்டுள்ளார்.

கொரோனா வைரஸை ஒழிக்க தீவிரம் காட்டுபவர்களில் ஒருவர் பிரதீப் கவுர். இவர் ஐசிஎம்ஆரின் துணை தலைவராக உள்ளார். கொரோனா பாதிப்பு தனக்கு வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதால் இவர் வீட்டில் தன்னை தானே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Prabhdeep Kaur says Chennai Lockdown will be effective

இந்த நிலையில் சென்னையில் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை வரவேற்ற பிரதீப் கவுர், சில ஆலோசனைகளையும் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார்.

அதிரடியான பிளான்.. அடுத்த 12 நாட்கள் மிக முக்கியம்.. சென்னை லாக்டவுன் கொஞ்சம் வித்தியாசமானது ஏன்? அதிரடியான பிளான்.. அடுத்த 12 நாட்கள் மிக முக்கியம்.. சென்னை லாக்டவுன் கொஞ்சம் வித்தியாசமானது ஏன்?

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் சென்னையில் லாக்டவுன் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றால் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா சோதனை எடுக்க வேண்டும்.

Prabhdeep Kaur says Chennai Lockdown will be effective

கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தால் முன்கூட்டியே தனிமைப்படுத்திவிட வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுப்பிரச்சினை ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என கவுர் தெரிவித்துள்ளார்.

English summary
ICMR Scientist Prabhdeep Kaur says Chennai Lockdown will be effective if there is aggressive testing of people with symptoms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X