‛‛இளைஞர்களின் உத்வேகமே’’.. பிரக்ஞானந்தாவை நேரில் பாராட்டிய கவுதம் அதானி! என்ன சொன்னார் தெரியுமா?
டெல்லி: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான கவுதம் அதானி தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரரான பிரக்ஞானந்தாவை இன்று நேரில் சந்தித்து பாராட்டினார்.
தமிழகத்தை சேர்ந்தவர் பிரக்ஞானந்தா. உலகில் முன்னணி செஸ் வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். உலகம் முழுவதும் உள்ள செஸ் சாம்பியன்களுக்கு சிம்ம சொப்பனமாக பிரக்ஞானந்தா விளங்கி வருகிறது. தான் பங்கேற்கும் போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் பிரக்ஞானந்தாவுக்கு வயது வெறும் 18 தான்.

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான இவர் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை செஸ் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் அவர் உலக சாம்பியனான மேகன்ஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய நிலையில் கடைசியில் பிரக்ஞானந்தா வெற்றியை இழந்து மயிரிழையில் உலக சாம்பியன் பட்டத்தை மிஸ் செய்தார்.
இந்த உலக கோப்பை செஸ் தொடரின் இறுதி போட்டியில் தோற்றாலும் கூட பிரக்ஞானந்தா உலகின் சிறந்த ஜூனியர் வீரர்களாக உள்ளதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) அறிவித்துள்ளது. இது பிரக்ஞானந்தாவின் சிறப்பான விளையாட்டு திறனுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் பிரக்ஞானந்தாவை இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான கவுதம் அதானி இன்று சந்தித்து பாராட்டியுள்ளார். இருவரும் சந்தித்த போட்டோவை கவுதம் அதானி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு அதில் பிரக்ஞானந்தா குறித்து பெருமையாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கவுதம் அதானி கூறியுள்ளதாவது:
"பிரக்ஞானந்தா செஸ் உலகில் தொடர்ந்து பதக்கங்களை வென்று இந்தியாவை பெருமைப்படுத்தி வருகிறார். அவரை ஆதரிப்பதை பாக்கியமாக கருதுகிறேன். அவருடைய வெற்றி என்பது இந்தியாவில் எண்ண முடியாத இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. பிரக்ஞானந்தா என்பவர் இந்தியாவால் என்ன செய்ய முடியும், என்னவாக இருக்க முடியும் என்பதை குறிக்கும் வகையில் இருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
It's a privilege to support Praggnanandhaa as he continues to win laurels in the world of chess and make India proud. His success is an inspiration to countless young Indians to believe that nothing is more gratifying than standing on the podium to celebrate our nation's… pic.twitter.com/8AjEFeVWN0
— Gautam Adani (@gautam_adani) January 5, 2024
சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவின் தந்தை பெயர் ரமேஷ் பாபு. தாய் பெயர் நாகலட்சுமி. இவரது சகோதரி பெயர் வைஷாலி. இவரும் செஸ் வீராங்கனை தான். பிரக்ஞானந்தா தனது 7வது வயதில் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்று ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டெஸ் எச்செக்ஸ் (FIDE) மாஸ்டர் பட்டம் பெற்றார். 10 வயதில், அவர் செஸ் இளைய சர்வதேச மாஸ்டர் என்ற பட்டத்தையும் பெற்றார். பிரக்ஞானந்தா தனது 16ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். இவருக்கு மத்திய அரசு சார்பில் அர்ஜூனா விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications