அழிக்கும் சக்தி.. பாஜக தலைவர்களின் மரணத்திற்கு காரணம் இதுவா?.. பிரக்யா தாக்கூரின் பகீர் கருத்து!

பாஜக தலைவர்களின் மரணத்திற்கு எதிர்க்கட்சிகள் ஏவி விட்ட அழிக்கும் சக்திதான் காரணம் என்று பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    marak shakti is the reason behind BJP leaders dismissals : MP Pragya Thakur

    டெல்லி: பாஜக தலைவர்களின் மரணத்திற்கு எதிர்க்கட்சிகள் ஏவி விட்ட அழிக்கும் சக்திதான் காரணம் என்று பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் தெரிவித்துள்ளார்.

    செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.

    இதில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகளை சந்தித்து வரும் ஒருவர்தான் சாத்வி பிரக்யா தாக்கூர். பெயிலில் வெளியே வந்த இவர் தற்போது பாஜக சார்பாக போபால் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகிவிட்டார்.

    என்ன சர்ச்சை

    என்ன சர்ச்சை

    இவர் நிறைய சர்ச்சையான கருத்துக்களை சொல்லி இருக்கிறார். நாங்கள் பாபர் மசூதியை இடித்தோம். நாங்கள் அதே இடத்தில் ராமர் கோவிலை கட்டுவோம். நாங்கள் எல்லோரும் சேர்ந்துதான் பாபர் மசூதியை இடித்தோம். நான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.

    என்ன பெருமை

    என்ன பெருமை

    நான் அதை பெருமையாக நினைக்கிறேன். பாபர் மசூதியின் மேல் ஏறி நான் அதை இடித்தேன். எனக்கு அதற்கான பலத்தை கடவுள் அளித்ததற்கு நன்றி. நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்தியாவின் பாபர் மசூதியை உடைத்தோம் என்று சாத்வி குறிப்பிட்டு இருக்கிறார்.

    என்ன சாபம்

    என்ன சாபம்

    அதேபோல் தீவிரவாத எதிர்ப்பு படையை சேர்ந்த மறைந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரே நான் கொடுத்த சாபத்தால்தான் பலியானார். அவர் என்னை கைது செய்தார். அதன்பின் சில நாட்களில் தீவிரவாதிகள் சுட்டு பலியானார், எல்லாம் என் சாபம் என்று கூறினார்.

    என்ன மரணம்

    என்ன மரணம்

    இப்படி வரிசையாக சர்ச்சை கருத்துக்களை பேசி வந்த அவர் தற்போது பாஜக தலைவர்களின் மரணம் குறித்தும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். பாஜகவை சேர்ந்த தலைவர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மரணம் அடைந்து வருகிறார்கள்.

    என்ன அதிர்ச்சி

    என்ன அதிர்ச்சி

    வெறும் ஒரு மாத இடைவெளியில் பாஜகவின் முக்கிய தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் மரணம் அடைந்தனர். இப்படி வரிசையாக தலைவர்களின் மரணம் பாஜகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    என்ன கருத்து

    என்ன கருத்து

    தற்போது இதுகுறித்து பிரக்யா தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், என்னிடம் ஒரு முறை மகாராஜ் ஜி (அவர் பின்பற்றும் சாமியார்) எங்கள் கட்சிக்கு கெட்ட நேரம் வரப்போகிறது என்று கூறினார். எதிர்க்கட்சிகள் ஏதோ செய்ய போகிறது என்று கூறினார். அவர்கள் எங்களுக்கு எதிராக அழிக்கும் சக்தியை பயன்படுத்துகிறது என்று கூறினார்.

    என்ன சந்தேகம்

    அப்போது நான் அதை மறந்துவிட்டேன். ஆனால் இப்போது வரிசையாக பாஜக தலைவர்கள், பெரிய தலைவர்கள் இறந்து வருகிறார்கள். இதனால் உண்மையில் மகாராஜ் ஜி சொன்னது போல நடக்கிறதோ என்று சந்தேகம் வருகிறது என்று கூறி உள்ளார். பாஜக தலைவர்களின் மரணம் குறித்து பிரக்யா தாக்கூர்இப்படி பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+